தனியார் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் இணைந்து 64 பயணிகள் உடைமைகளை எடுத்துக் கொண்டு பேருந்தோடு எஸ்கேப் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவிலிருந்து அசாம் வரையில் பல்வேறு இடங்களுக்கு பயணிகள் சென்றுள்ளனர். செல்லும் வழியில் உணவிற்காக நிறுத்துவதாகக் கூறி பேருந்துடன் 64 பயணிகளின் லக்கேஜ்களைத் திருடிக் கொண்டு ஓட்டுநரும் நடத்துனரும் தப்பியோடியுள்ளனர். வெள்ளை நிறம் கொண்ட அந்த பேருந்தின் எண் KL-38-D-709. 
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தின் நற்கேட்பள்ளி எனும் இடத்தில்தான் இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உணவு இடைவேஐ எனக்கூறி இரவு 11 மணியளவில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பயணிகளை உணவருந்துமாறும் அதற்குள்ளாக பேருந்தின் ஒரு சக்கரத்தை மாற்ற வேண்டும் எனவும் சொல்லியுள்ளனர். அதற்காக அனைவருமே பேருந்தைவிட்டு இறங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் புறப்பட்டுச் சென்ற பேருந்து திரும்பி வரவே இல்லை. பயணிகளும் நெடுநேரம் காத்திருந்தனர்.


இங்க இருந்த சுரங்கப்பாதை எங்கே..? தண்ணீரில் தத்தளிக்கும் வட சென்னை! மூழ்கிப்போன முக்கிய இடம்!




இந்த பஸ் முதலில் விசாகப்பட்டினம், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் வழியாக செல்ல திட்டமிடப்பட்டது, ஆனால்  டிரைவர் பாதையை மாற்றி தெலுங்கானா வழியாக வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நர்கெட்பள்ளியில் உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் துர்கா ஹோட்டலில் இறக்கிவிடப்பட்டனர்.


ABP Nadu Exclusive: கனமழையால் அடுத்தடுத்து செயலிழக்கும் மொபைல போன் டவர்கள்: இதுவரை பாதித்த பகுதிகள் இதோ!


முன்னதாக, கேரளாவில் பணிபுரியும் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். டிராவல்ஸ் ஏஜெண்டிடம் தலா ரூ.3,500 செலுத்தியதாக கூறப்படுகிறது. பயணிகள் அனைவரும் பீகார், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். உடமைகள் இல்லாமல் தவித்த அவர்கள் நர்கெட்பல்லி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். பல பயணிகளின் பைகளில் நகைகள் இருந்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.


இந்நிலையில் இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர், நடத்துனர் வேடத்தில் 64 பயணிகளிடம் லக்கேஜ்கள் திருடப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண