பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் அக்டோபர் 2024-ல் ரூ.1000 கோடி மதிப்புள்ள விற்பனையை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பர், 2023 இல் இந்த இலக்கை எட்டியதை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என மத்திய அரசு தெரிவிட்துள்ளது .
மக்கள் மருந்தகம்:
மக்கள் மருந்தகமானது,மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்நிலயில், பாரதிய மக்கள் மருந்தகம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது,
இந்த சாதனை மலிவு மற்றும் தரமான மருந்துகள் மீது, மக்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்களிலிருந்து மருந்துகளை வாங்குவதன் மூலம், இந்த முயற்சியை ஏற்றுக்கொண்ட மக்களின் அசைக்க முடியாத ஆதரவால் தான் இது சாத்தியமானது.
இந்த கணிசமான வளர்ச்சி, கையிருப்பிலிருந்து செலவினங்களைக் குறைப்பதன் மூலம் அனைவருக்கும் சுகாதார சேவையை அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும் மாற்றுவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். சில நாட்களுக்கு முன்பு, பிஎம்பிஐ செப்டம்பர் 2024-ல் ஒரே மாதத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள மருந்துகளை விற்றது குறிப்பிடத்தக்கது.
25,000 மக்கள் மருந்துகம்
2014-ல் வெறும் 80 ஆக இருந்த மையங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 170 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 14,000-க்கும் மேற்பட்ட மையங்களாக அவை வளர்ந்துள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில், நாட்டில் 25,000 மக்கள் மருந்தக மையங்கள் அமைக்கப்படும்.
பி.எம்.பி.ஜே.பி.யின் தயாரிப்புகளில் 2047 மருந்துகள் மற்றும் 300 அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன, இதில் இதய ரத்தக்குழாய் மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு, இரத்த சோகை, நீரிழிவு, தொற்று எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, இரைப்பை குடல் மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் போன்ற அனைத்து முக்கிய சிகிச்சை குழுக்களும் அடங்கும். தினமும் சுமார் 10 லட்சம் பேர், பிரபலமான இந்த மக்கள் நட்பு மையங்களுக்கு வருகை தருகின்றனர்.
சுகாதார சமத்துவம்
பி.எம்.பி.ஜே.பி முன்முயற்சி, சமூகங்களுக்கு தொடர்ந்து அதிகாரம் அளித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான சுகாதாரத்தை எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கிறது. சாதனையை முறியடிக்கும் விற்பனை திட்டத்தின் வெற்றியை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், நாட்டில் சுகாதார சமத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.