பிரதமர் நரேந்திர மோடி 2019ம் ஆண்டு முதல் 21 வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், மேலும் இந்த பயணங்களுக்காக ₹22.76 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதற்கிடையே குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் இதுவரை மொத்தம் எட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2019ம் ஆண்டு முதல் இந்தப் பயணங்களுக்காக ₹6.24 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.


2019ம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் பயணத்துக்காக ₹6,24,31,424 கோடி ரூபாயும் பிரதமரின் பயணத்துக்காக ₹22,76,76,934 கோடி ரூபாயும் வெளியுறவுத் துறை அமைச்சர் பயணத்துக்காக ₹20,87,01,475 கோடி ரூபாயும் என அரசு செலவிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


குடியரசுத் தலைவர் எட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் 2019ஆம் ஆண்டு முதல் 21 பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 86 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.


2019 முதல், பிரதமர் ஜப்பானுக்கு மூன்று முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு முறையும் சென்றுள்ளார்.


குடியரசுத் தலைவரின் பயணங்களில், எட்டு பயணங்களில் ஏழு பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டார், தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த செப்டம்பரில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.




இதற்கிடையே,


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - காவஸ்கர் டிராபியின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 ம் தேதி தொடங்கி 13 வரை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸும் நேரில் ஒன்றாக அமர்ந்து பார்வையிட போவதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. 


 மறுமுறை புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு தனது பெயர் சூட்டப்பட்ட பிறகு இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி பிறகு, பார்வையிடும் முதல் போட்டி இதுவாகும். 


ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை நடைபெற இருக்கிறது. 


ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்திற்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அறிவிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இஷான் கிஷனும், இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார்யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.