PM Modi Oath Ceremony LIVE: “மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறேன்” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
PM Modi Oath Taking Ceremony LIVE Updates: மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில், மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
சுதர்சன்Last Updated: 09 Jun 2024 10:25 PM
Background
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து இன்று புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. பாஜக கூட்டணி, சுமார் 400 இடங்களுக்கு மேலும் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின.கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக:...More
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து இன்று புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. பாஜக கூட்டணி, சுமார் 400 இடங்களுக்கு மேலும் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின.கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக: ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் அமைந்தன. பாஜக அதன் கூட்டணி கட்சியுடன் இணைந்தே 293 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆந்திராவில் ஆட்சியமைக்கும் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரில் ஆட்சியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் இணைந்து 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் பாஜக. ஆட்சி அமைக்க உறுதுணையாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கும், நிதிஷ்குமாரின் ஜனதா தளத்திற்கு 2 பேருக்கும் மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? 16 தொகுதிளை தங்கள் வசம் வைத்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, ஹரீஷ் பாலயோகி. டகுமல்லா பிரசாத் மற்றும் சந்திரசேகர் ராவ் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதில், சந்திரசேகர் ராவ் மிகவும் பணக்கார எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தில் இரண்டு மூத்த தலைவர்களுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
PM Modi Oath Ceremony LIVE: “மாநில உரிமைகளை மதிப்பீர்கள் என நம்புகிறேன்” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதன் மூலம் பிரதமராக, அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநிலங்களின் உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும் உண்மையான உணர்வோடு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சரவை அமைச்சராக இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே பதவியேற்றார்.
PM Modi Oath Ceremony LIVE: பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மற்ற நாட்டு பிரதமர்கள்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலைதீவு அதிபர் டாக்டர் மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமட் அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
PM Modi Oath Ceremony LIVE: டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர் பதவியேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய அமைச்சரவை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர் பதவியேற்றார்.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ட்வீட் செய்துள்ளார், "மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தியுள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர் கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
PM Modi Oath Ceremony LIVE: புதிய அமைச்சர்கள் குழுவில் ஏழு முன்னாள் முதல்வர்கள்
மோடி அமைச்சரவையில் பதவியேற்ற புதிய அமைச்சர்கள் குழுவில் நரேந்திர மோடி உட்பட ஏழு முன்னாள் முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மற்ற ஆறு முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), ராஜ்நாத் சிங் (உத்தர பிரதேசம்), மனோகர் லால் கட்டார் (ஹரியானா), சர்பானந்தா சோனோவால் (அசாம்), எச் டி குமாரசாமி (கர்நாடகா), மற்றும் ஜிதன் ராம் மஞ்சி (பீகார்).
இந்த முன்னாள் முதல்வர்களில் ஐந்து பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், குமாரசாமி மற்றும் மஞ்சி ஆகியோர் பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளான ஜேடி(எஸ்) மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவை சேர்ந்தவர்கள்.
PM Modi Oath Ceremony LIVE: பதவி பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த குடியரசுத் தலைவர்
பிரதமராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்ய ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை தந்த போது....
PM Modi Oath Ceremony LIVE: காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், ”கடந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இம்முறை கூட்டணி ஆட்சி. தெலுங்கு தேசம், ஜே.டி.யு உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து ஆதரவு பெற்று ஆட்சி அமைக்கிறது. பாஜக முன்பு செய்த செயல்கள் மற்றும் சிந்தனையில் இப்போது இருக்க முடியாது. அவர்கள் நினைப்பு நிறைவேறாமல் போகலாம். ஏனென்றால் அவர்களை ஆதரிப்பவர்கள் வேறு, அவர்களின் சித்தாந்தங்கள் வேறு” எனத் தெரிவித்தார்.
டெல்லி: பாஜக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுராக் தாக்கூர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எனது வாழ்த்துக்கள். அவரது அமைச்சர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்றி அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
டெல்லி: பாஜக எம்எல்சி பிரசாத் லாட் கூறுகையில், “70 ஆண்டுகளுக்குப் பிறகு, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமரான இரண்டாவது நபர் பிரதமர் நரேந்திர மோடிதான். பிரதமர் விழாவில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து 2,500-3,000 பாஜகவினர் வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
Modi Cabinet 2024 LIVE: முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை
பாஜக கூட்டணியில் உள்ள ஜே.டி. எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, உடல்நலக் குறைவு காரணமாக பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
PM Modi Oath Ceremony LIVE: தேர்தல்கள் முடிந்துவிட்டன, இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் - ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "இந்திய ஜனநாயகம் எவ்வளவு வலிமையானது என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். தேர்தல்கள் முடிந்துவிட்டன. இனி, இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். EVM பற்றி மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது.
மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதால் நேருவுடன் ஒப்பிடுவது சரியல்ல, அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து எச்சரித்துள்ளதாக மயிலாடுதுறை அருகே மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார்.
கரீம்நகரில் உள்ள பாஜக எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாண்டி சஞ்சயின் இல்லத்தில் இன்று கொண்டாட்டம் நடைபெற்றது.
இன்று முன்னதாக, பிரதமராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடியின் இல்லத்தில் நடந்த தேநீர் கூட்டத்தில் பாண்டி சஞ்சய் கலந்து கொண்டார். இவர் மோடி அமைச்சரவையில் தெலுங்கானா சார்பில் இடம் பெறுவார்.
தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்யின் மனைவி பாண்டி அபர்ணா கூறுகையில், "பிரதமர் மோடி மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம்” எனத் தெரிவித்தார்.
PM Modi Oath Ceremony LIVE: பாஜக எம்.பி வீரேந்திர குமார்
டெல்லி: பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திர குமார் கூறுகையில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கின்னர் சமூகத்தினர் அதிக அளவில் வந்துள்ளனர். 'சப்கா சத்' பற்றி பேசும்போது அனைவரையும் சேர்த்துக் கொள்கிறோம். இந்த NDA மூன்றாவது பதவிக்காலத்தை நோக்கி நகர்கிறது. NDA வின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் பாடுபடுவோம்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், "மகாராஷ்டிராவின் பல அனுபவமிக்க மற்றும் மூத்த தலைவர்களுக்கு மோடி அரசான என்.டி.ஏ அரசில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். நிதின் கட்கரி ஜி, பியூஷ் கோயல் ஜி மற்றும் ராம்தாஸ் அத்வாலே ஜி ஆகியோர் மீண்டும் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார்கள். ரக்ஷா காட்சே மற்றும் முரளிதர் மொஹோல் போன்ற இளம் எம்.பி.க்களும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், விதர்பா பகுதியைச் சேர்ந்த மூத்த தலைவர் பிரதாப்ராவ் ஜாதவும் அமைச்சராகிறார். வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.