ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Continues below advertisement

அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்:

அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி குவைத்திற்கு சென்றுள்ளார். அங்கு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்துள்ளனர். குவைத் எமிர் ஷேக் மெஷல் அல்-அகமது விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

Continues below advertisement

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். பின்னர் உரையாற்றிய அவர், "அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.

"நன்றியுள்ளவனாக இருக்கிறேன்"

அவர்களின் உற்சாகத்திற்கும், நமது நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.

இதையடுத்து, ராமாயணம், மகாபாரதம் ஆகியவை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்ட குவைத் நாட்டை சேர்ந்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் ஆகியோருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதை மொழிபெயர்த்து வெளியிட எடுத்த முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீஃப் அல்-நெசெஃப் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். அவர்களின் இந்த முயற்சி உலக அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?