மனதின் குரல்:
பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். உரையில் சில நாட்களுக்கு முன்பு சுவாரஸ்யமான விஷயத்தை பார்க்க நேர்ந்தது. அதில் நாட்டு மக்களின் படைப்புத் திறன் மற்றும் கலைத்திறன் ஒளிர் வீசியதை கண்டேன் என தெரிவித்தார்.
தஞ்சாவூர் பொம்மை:
தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவானது, புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொம்மையை எனக்கு பரிசாக அனுப்பியுள்ளது. இந்த பரிசில் இந்திய நாட்டின் மணமும், வட்டார கலாச்சார மணமும் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மகளிர்களுக்கு நன்றி:
மகளிர் சுய உதவி குழுக்கள் அனுப்பிய தஞ்சாவூர் பொம்மையில் தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன. தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியும்:
இந்தப் மகளிர் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கிறார்கள். இந்த முயற்சியால் கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாய் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது. மனதின் குரல் நேயர்களே, இது போன்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆதரவு தாருங்கள்.அதன்மூலம் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்..
நன்றி தெரிவித்த தமிழிசை:
தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி என்ற பெயரில் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அங்காடி நடத்தி வருகின்றனர். இக்குழுவினர் சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடிக்கு தஞ்சாவூர் பொம்மையை பரிசாக அனுப்பினர். இந்நிலையில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தஞ்சாவூர் பொம்மையை குறித்து பேசியது தமிழ்நாடு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்