பிரதமர் நரேந்திர மோடி, இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த இருக்கிறார்.
கொவிட்-19 மற்றும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு எதிரான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒமிக்ரான் தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைப் பொருத்த வரையில், 18 லட்சம் தனிமைப்படுத்தல் படுக்கைகள், 1.4 தீவிர சிகிச்சைப்பிரிவு வசதியுடன் கூடிய படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. நாடு முழுவதும் 3000 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
தேசிய தடுப்பூசி இயக்கம் குறித்து பேசிய அவர், இந்தியாவின் மக்கள் தொகையில் தகுதியானவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இப்போது முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்ககள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த முக்கிய மைல்கல்லாக, 2022 ஜனவரி 3ம் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் படயிருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், முன் கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்து கொண்ட பிரிவினர் இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்