இந்திய பிரதமர் மோடி 5 நாள்கள் சுற்றுப்பயணமாக நேற்று வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். இத்தாலி, வாடிகன் மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளுக்கு அவர் 5 நாடுகள் சுற்றுப்பயணமாக அவர் நேற்று நள்ளிரவு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட பிரதமர் மோடி முதலில் இத்தாலி செல்கிறார். இத்தாலி செல்லும் அவர் அங்கு நடைபெற உள்ள 16வது ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் உலகத்தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, ஜி16 மாநாடு நடைபெற உள்ள ரோம் மாநகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார்.
ரோமில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உலகப்பொருளாதாரம் மற்றும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருதல், நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து உலகத்தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார்.
பின்னர், அங்கிருந்து வாடிகன் செல்லும் பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் ஆண்டவரான போப் பிரான்சிசை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வாடிகனுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இத்தாலியில் இருந்து செல்கிறார்.
ஜி20 உச்சிமாநாடு மற்றும் போப் ஆண்டவர் போப் பிரான்சிசுடனான சந்திப்பு ஆகியவற்றிற்கு பின்னர் பிரதமர் மோடி இத்தாலியில் இருந்து புறப்பட்டு ஸ்காட்லாந்து செல்கிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ செல்லும் அவருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி நாட்டிற்கு செல்லும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாஸ்கோவில் வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலகத்தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் 120 மாகாணங்கள் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்தியாவிற்கு 99ஆண்டுகள் சுதந்திரம் லீஸ்.. பாஜக பெண் பிரமுகரின் சர்ச்சை கருத்து..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்