மேலும் அறிய

Petrol: அமெரிக்கா - ஈரான் போரால்தான் பெட்ரோல் விலை ஏறுனுச்சா? உண்மையை தெரிஞ்சுக்கோங்க மக்களே

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்கா - ஈரான் போர் மட்டும் காரணம் இல்லை. இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் 4 உயர்த்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வணிக சிலிண்டர் விலையை ஒரே நாளில் 1000 ரூபாய் உயர்த்தி அதிர்ச்சி அளித்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு:

மத்திய அரசு இந்த விலை உயர்வுக்கு அமெரிக்கா - ஈரான் போரை முக்கிய காரணமாக காட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூபாய் 1000 கோடி இழப்பு ஏற்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இது மட்டுமே காரணம் அல்ல. இதுவும் ஒரு காரணமே என்பது உண்மையாகும்.

உண்மையான காரணம் என்ன?

2022ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலருக்குச் சென்ற பிறகு, அதன் பின்னர் தொடர்ந்து விலை குறைந்து அதலபாதாளத்திற்கு விலை வீழ்ந்தது. ஆனால், மத்தியில் இருந்த பாஜக அரசு அப்போது எந்த விலை குறைப்பையும் செய்யவில்லை. மாறாக தினசரி விலை உயர்வை உண்டாக்கி மக்களை வேதனைப்படுத்தியது. 

மத்திய - மாநில அரசுகள் வரி:

உண்மையில் பெட்ரோலின் அடக்க விலை இந்தியாவில் ரூபாய் 55.66  மட்டுமே. அதாவது ரூபாய் 56 ஆகும். இந்த விலையுடன் மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி, டீலர் கமிஷன் ஆகியவை அனைத்தும் சேர்த்தே நாம் பெட்ரோல் போடும்போது விலையாக நம்மிடம் வசூலிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மிகவும் சரிந்து வீழ்ந்தபோது கூட மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி தங்களது வரியை குறைக்கவில்லை. 

மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 19.90 ஆகும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதனுடன் ஒவ்வொரு மாநில அரசும் தனியாக வாட் வரி விதிக்கிறது. தமிழ்நாட்டிற்கு வாட் வரியாக 13 சதவீதம் மட்டுமின்றி லிட்டருக்கு ரூபாய் 11.52 வசூலிக்கப்படுகிறது. இதுவே டீசலுக்கு வாட் வரி 11 சதவீதத்துடன் 9.62 ரூபாய் லிட்டருக்கு வசூலிக்கப்படுகிறது. இதுபோக, டீலர் கமிஷன் ரூபாய் 4 வரை வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் 100க்கு மேல் விற்கப்படுகிறது. 

வீழ்ச்சியின்போது குறையாத விலை:

அமெரிக்கா - ஈரான் போருக்கு முன்பாக கடந்த 2022ம் ஆண்டு 105 டாலர் வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விற்கப்பட்டது. அதே கச்சா எண்ணெய் 2023ம் ஆண்டு ஒரு பேரலுக்கு 75 டாலர் முதல் 85 டாலர் வரை சரிந்தது. கடந்த 2024ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 டாலர் முதல் 80 டாலர் வரை குறைந்தது. கடந்தாண்டு 60 டாலர் முதல் 70 டாலர் வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. 

ஆனால், அப்போது எல்லாம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவே இல்லை. மாறாக எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபம் அளிக்கும் வகையில் பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை இந்த அமெரிக்க போரால் உயர்ந்துள்ள சூழலில், இந்த போரை காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. 

விலை குறையுமா?

கொரோனோ பேரிடருக்கு பிறகு மக்கள் போராடி மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள சூழலில், மக்களை வாட்டும் வகையில் மத்திய அரசு இப்படி பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது அவர்களை மேலும் வாட்டும் செயலாக உள்ளது. இ்ந்த கடுமையான போர் சூழலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது வரிகளை சற்று குறைத்து மக்களின் கவலையை போக்கும் வகையில் வரியை குறைக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மோடி அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
கல்விக் கடனில் பெரிய மாற்றம்? அடமானம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற வாய்ப்பு!
Top 10 News Headlines: பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை, பிரதமரை சந்திக்கும் விஜய், அமெரிக்கா-ஈரான் மீண்டும் போர்.? - 11 மணி செய்திகள்
HIV Cases: அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய்.. ஆண்களுக்கு இடையேயான பாலியல் உறவு காரணமா? - அரசு கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
லட்சக்கணக்கில் சம்பளம்.. ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநரின் சோகக்கதை.. இதெல்லாம் நியாயமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget