நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை ரிலாக்ஸ் செய்ய வைத்து மகிழ்ச்சியை பொதுவாக அள்ளித் தருகின்றன. ஆனால் நாம் அவற்றை சரிவர பராமரிக்கத் தவறும் பட்சத்தில் அவை நமக்கு பெரும் பாதகமாக மாறக்கூடும்.


அந்த வகையில், முன்னதாக 11 வயது சிறுவன் ஒருவன் செல்லப்பிராணி நாயால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முகத்தில் கடித்துக் குதறிய நாய்


பிட்புல் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் சிறுவனைத் தாக்கும் சிசி டிவி காட்சி முன்னதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வீடியோவில் வீட்டுக்கு வெளியே உள்ள பூங்காவில் சிறுவன் வீடியோவில் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் உரிமையாளர் ஒருவர் அழைத்து வரும் பிட்புல் இன நாய் திடீரென விரைந்து சிறுவனின் முகம் மற்றும் காதைக் குறிவைத்து தாக்குகிறது. 


இதில் சுற்றியிருந்தோர் அதிர்ந்து சிறுவனை மீட்க ஓடும் நிலையில், அதற்குள் நாய் சிறுவனின் முகத்தை பயங்கரமாகத் தாக்குகிறது.  இந்த தாக்குதல் சிசிடிவி காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 






உத்தரப் பிரதேசம், காசியாபாத்தைச் சேர்ந்த சிறுவனின் முகத்தை நாய் கொடூரமாக கடித்துக் குதறிய நிலையில் முன்னதாக அவரது உடலில் 150 தையல்கள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பிட்புல் நாயின் உரிமையாளரான காஜியாபாத்தைச் சேர்ந்த சுபாஷ் தியாகி, உரிமம் பெறாமல் நாயை வளர்த்து வந்தது முன்னதாகத் தெரிய வந்துள்ளது. 


தடை செய்யப்பட்ட நாய்


பிட் புல் நடுத்தர அளவிலான, குட்டையான பருமனான நாய், இது பயிற்சி பெறாதவர்களால் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாத அளவுக்கு கொடூரமான இயல்புடையதாகக் கருதப்படுகிறது.


பொதுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இயற்றப்பட்ட UK's Dangerous Dogs Act, 1991 சட்டத்தின்படி இந்த பிட்புல் நாய்கள் 'சண்டைக்காக வளர்க்கப்படும் நாய்களில்' ஒன்றாகவும் இது பட்டியலிடப்பட்டுள்ளது.அதனால் பயிற்சி இல்லாதவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டத்தை மீறும் செயலாகும்.


இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் அப்பகுதி மக்களுக்கும் இந்த நாய் உரிமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், செல்லப் பிராணி வளர்ப்பை பொறுப்புடன் மேற்கொள்ளுமாறும் கூறி வருகின்றனர்.


 






இதேபோல் முன்னதாக காஜியாபாத் அருகில் இருந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள லிஃப்ட்டில் சிறுவனை வளர்ப்பு நாய் கடித்தது. இதைப்பார்த்த அந்த நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் லிப்டில் இருந்த கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.