பிரியாணி சாப்பிட ஓட்டலுக்கு கிளம்பிய நபர்! அதிகாலையில் நேர்ந்த சோகம்
பிரியாணி சாப்பிட ஓட்டலுக்கு அதிகாலையில் கிளம்பிய நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிட ஓட்டலுக்கு அதிகாலையில் கிளம்பிய நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியாளர் படிப்பு படித்து வந்தார்.
Just In




இவருக்கும் இவரது நண்பர்களுக்கு திடீரென அதிகாலையில் பிரியாணி சாப்பிட ஆசை வந்துள்ளது. இதையடுத்து நிஷாந்த் தனது நண்பரான சிதானந்துடன் பிரியாணி சாப்பிட பெங்களூர் அருகே உள்ள ஒசக்கோட்டை ஓட்டளுக்கு இருச் சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அதிகாலை 3 மணி இவர்கள் கிளம்பியுள்ளனர். இவர்களுடன் மேலும் ஒரு பைக்கில் 3 பேர் சென்றுள்ளனர். சிட்டி மார்க்கெட் அருகே உள்ள பிஜிஎஸ் மேம்பாலத்தில் வரும்போது நிஷாந்த் வந்த பைக் சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கில் வான் நோக்கி பறந்து கீழே விழுந்தது. நிஷாந்த் படுகாயமடைந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் சிதானந்த் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் பைக் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என சிட்டி மார்க்கெட் போலீசார் தெரிவித்துள்ளனர்.