மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்ச் மாவட்டத்தில் ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலம், இப்போது விவசாயிகளுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறி உள்ளது. பதஞ்சலி யோக பீடம் எடுத்த முயற்சிகளே, இதற்கு காரணம். உற்பத்தி செய்யாத நிலத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் இந்த திட்டத்தின் மூலம், இப்பகுதி விவசாய செழிப்பில் எழுச்சியையும், விந்திய பிராந்தியத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தையும் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ப்பணிப்புடன் செயல்படும் பதஞ்சலி:
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்தியப் பிரதேச துணை முதலமைச்சர் ராஜேந்திர சுக்லா, பதஞ்சலி யோகபீடத்தின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவிடம் அந்தப் பகுதியின் நிலப் பதிவேட்டை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
நில பதிவேடு வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆச்சார்ய பாலகிருஷ்ணா அந்த இடத்தை சுற்றிப் பார்த்து எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யோகா குரு பாபா ராம்தேவின் வழிகாட்டுதலின் கீழ், விவசாயிகளின் செழிப்பு என்ற கனவை நனவாக்க பதஞ்சலி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
இந்த முயற்சி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விந்தியப் பகுதி முழுவதும் முழுமையான வளர்ச்சியையும் துரிதப்படுத்தும்" என்றார்.
விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்:
மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள குரேத்தா கிராமத்தில் தொழில்துறை பூங்காவை நிறுவ பதஞ்சலி திட்டமிட்டுள்ளது. இந்த பூங்கா உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்திற்கு கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு வளங்களை அணுகவும் உதவும்.
பயிர் பல்வகைப்படுத்தல், பயிற்சி மையங்கள், விதை உற்பத்தி அலகுகள் மற்றும் முதன்மை செயலாக்க வசதிகள் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த கூறுகள் விவசாயிகளை நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த வளங்களுடன் சித்தப்படுத்துவதையும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதையும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மாற்றம் விவசாயச் செலவுகளைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிக்கும்.
இதுகுறித்து பேசிய ஆச்சார்ய பாலகிருஷ்ணா, "இந்தத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கும். அவர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற உதவும். விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கு அப்பால், வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக மேம்பாடு மற்றும் சுற்றுலாவை வளர்க்கும். இது மௌகஞ்ச் மற்றும் விந்தியப் பகுதிக்கு ஒரு புதிய தொடக்கத்தை தரும். விவசாயிகளின் கடின உழைப்பை நீடித்த செழிப்பாக மாற்றுகிறது" என்றார்.