இந்தியாவில் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கொள்ளையடிக்கும் கடன் நடைமுறைகள் தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் அதிக கொள்ளையடிக்கிறது என்றாலே யோசிக்காமல் நாம் சொல்வது அது அரசியல் வாதிகளின் கல்வி நிறுவனங்கள் தான் என்று. ஆனால் இந்த நிலை தற்போது முற்றிலும் மாறி ஆன்லைன் வழிக்கல்வி தொடர்பான  சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்ட ஊரடங்கினால் பெரும்பாலான மக்கள் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் கல்வி நிறுவனங்களில் பயில ஆர்வத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.  இதன் விளைவாகத் தான் இந்தியாவில் தற்போது  4500க்கும் மேற்பட்ட ஆன்லைன் வழிக்கல்வித் தொடர்பான ஸ்டார் அப் நிறுவனங்கள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் 435 நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


 






குறிப்பாக ஆன்லைன் வழி கல்வி நிறுவனங்களின் தேவை ஒருபுறம் வேண்டும் என்றாலும் இந்நிறுவனங்கள் மாணவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தான் உள்ளனர் என்பது தான் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது.  இதன் காரணமாக பலர் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் தான், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் ஆன்லைன்  கல்வி முறைகேடுகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் தற்போதுள்ள சூழலில் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மக்களுக்கு  நல்ல கல்வி தருகிறோம் என்று மக்களை ஏமாற்றுகின்றனர் எனவும், சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளார்களா? என்பதைக்குறித்து யாரும் கவனிப்பதில்லை.  இதனாலே மக்கள் பணத்தைக்கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர் எனவும்  அதற்கேற்றால் போல் கல்வி நிறுவனங்களும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் உள்ளனர். எனவே மக்களின் எதிர்கால நலன் கருதி இந்த ஆன்லைன் கல்வி முறைகள் குறித்து ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும், முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் கண்காணிக்க வேண்டும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.  





இதோடு மட்டுமின்றி இந்த ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்கும் பணம் 21 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இது கல்வித்துறை ஒதுக்கீடு செய்யும் பணத்தை விட குறைவானது எனவும் விமர்சனம் செய்தார். மேலும் இந்தியாவில் உள்ள இணையவழிக்கல்வி நிறுவனங்கள் கிரிக்கெட் டீமிற்கு ஸ்பான்சர் செய்யும் நிலையில் உள்ளது என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. எனவே இந்தியாவில் இணையவழிக்கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.