நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக:


கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். கடந்த சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முன்னுரிமையாக உள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.



இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை அண்மையில் சமர்ப்பித்தது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு சமீபத்தில் ஏற்று கொண்டது. 


ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?


ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயகத்துக்கு பாதகமான விளைவிகளை ஏற்படுத்தும் என்றும் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தேவையில்லாத செலவுகள் ஏற்படும் என்றும் கூறி வருகின்றன.


கடந்த காலத்தில் 1951 முதல் 1967 வரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான். அதன் பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகளால் மாநிலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன. இடைத்தேர்தல்கள் வந்தன.


பல்வேறு மாநில சட்டசபைகளின் தொகுதிகள் மறுவரையற செய்யப்பட்டன. மக்களவைக்கும், மாநில சட்டசபை தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லாமல் போனது. 


இதையும் படிக்க: Adventure Destinations: அட்வென்சர் ட்ரிப் பிடிக்குமா? சாகச பயணத்திற்கான இந்தியாவின் சிறந்த ஸ்பாட், ட்ரக்கிங் - சர்ஃபிங்