Gautam Adani: இந்திய கார்ப்ரேட்டில் முதல்முறை.. பிறந்தநாளுக்காக ரூ.60ஆயிரம் கோடி.. அலறவிடும் அதானி!

அறக்கட்டளைகள் மூலமாக இந்த தொகை சமூகப்பணிகளுக்கு பயன்படும் என அதானி குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Continues below advertisement

தன்னுடைய 60வதாவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ரூ.60ஆயிரம் கோடியை சமூகப்பணிகளுக்காக வழங்கபோவதாக அறிவித்துள்ளார். அறக்கட்டளைகள் மூலமாக இந்த தொகை சமூகப்பணிகளுக்கு பயன்படும் என அதானி குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளை மேம்படுத்துவதற்காக அதானி அறக்கட்டளை மூலம் இந்த நன்கொடை நிர்வகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அதானி, இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் அறக்கட்டளை மூலம் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்படுவது இதுவே முதல்முறை. தனது தந்தை சாந்திலால் அதானியின் பிறந்த நூற்றாண்டு ஆண்டை கௌரவிக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமையும் என தெரிவித்தார். அதானி தன்னுடைய 60 வது பிறந்தநாளை ஜூன் 24ம் தேதி கொண்டாடுகிறார்.

Continues below advertisement


1988 இல் ஒரு சிறிய விவசாய வர்த்தக நிறுவனத்துடன் தனது வர்த்தக பயணத்தை தொடங்கிய அதானி குழுமம், இப்போது நிலக்கரி வர்த்தகம், சுரங்கம், தளவாடங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், பசுமை ஆற்றல், விமான நிலையங்கள், தரவு மையங்கள் மற்றும் சிமெண்ட் தயாரிப்பு என பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. அடுத்தடுத்த தொழில்களை கட்டமைக்கும் வல்லமை கொண்ட கௌதம் அதானியின் தொழில் வளர்ச்சி ஆச்சரியமானது. துறைமுகம் மூலம் நிலக்கரி, திரவ எரிவாயு மற்றும் பாமாயில்  ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரிகளை வழங்கத் தொடங்கிய அதானி, பின்னர் அத்துறை சார்ந்த சுரங்கம் மற்றும்  மின்சார உற்பத்தி மற்றும் விநியோக தொழில்களில் கால்பதித்தார். 

இந்திய நகரங்களுக்கு குழாய்  மூலம் எரிவாயுவை சப்ளை செய்யத் தொடங்கிய அவர், சூரிய மின் தகடுகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். பின்னர் அந்த வணிகம், விமான நிலையங்களாகவும், தானியக்கிடங்குகளாகவும், தரவு மையங்களாகவும்  விரிவடைந்துள்ளது. ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட்  ஆகிய சிமெண்ட் நிறுவனங்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த  ஹோல்சிம் நிறுவனம் வைத்திருந்த பங்குகளை 10.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியதன் மூலம் சிமெண்ட் தொழிலிலும் தனது செல்வாக்கை செலுத்த தொடங்கி உள்ளார் கௌதம் அதானி. தற்போது உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5ல் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் அதானி இந்தியாவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.


மாநிலங்களைவைவையில் சில உறுப்பினர்களிகளின் பதவிக்காலம் ஜீன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யப்படுவதற்காக, தேர்தல் மாநிலங்களவை தேர்தலுக்கான் மனுதாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கவுதம் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவி வந்தன . உடனடியாக அறிக்கை விட்ட அதானி குழுமம், அதானி குடும்பத்திற்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை எனவும் அரசியலுக்கு வருவதாக சமூத வளைதளங்களில் வந்து கொண்டிருக்கும்  செய்தியானது உண்மைக்கு புறம்பானது  எனவும் குறிப்பிட்டனர்

Continues below advertisement