திருமணங்கள் ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இருப்பினும், திருமண சடங்குகள் குறிப்பாக இந்திய திருமணமாக இருக்கும்போது மாப்பிள்ளைகளுக்கும் மணப்பெண்களுக்கும் அது களைப்பூட்டும் விதமாக அமைந்துவிடுகின்றன.
பாரம்பரிய திருமண முறையில் விரிவான சடங்குகளும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த திருமண நாளில், விரிவான முறையில் ஒப்பனை செய்து கொள்வதாலும் போட்டோஷூட்டாலும் மணப்பெண்கள் சோர்வடைந்து விடுகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுதான் தற்போது அரங்கேறியுள்ளது.
அதிகாலையில் திருமண சடங்கு நடைபெற்று கொண்டிருந்தபோது, இந்திய மணப்பெண் ஒருவர் தூங்கி வழியும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பழைய வீடியோவை மணமகளே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "இதோ காலை 06:30 மணி. திருமணம் நடந்து கொண்டிருக்கும் போது தூங்கி வழியும் மணமகள் (நானேதான்)" என பதிவிட்டுள்ளார். வீடியோவில், காலையில் மிகவும் சோர்வாக இருக்கும் மணமகள், கனமான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உடையில் தனது திருமணத்தின் போது தூங்குவதைக் காணலாம்.
மணமகள் அருகிலேயே மணமகன் நின்று கொண்டு சடங்கினை செய்யும்போது மணமகள் உட்கார்ந்து கொண்டு தூங்குவதைக் காணலாம். மணப்பெண்ணின் தோழியாக கருதப்படும் பால்வி ஷர்மா என்பவர், மணப்பெண் தூங்குவதை அவருக்கு தெரியாமல் வீடியோவாக எடுக்கிறார்.
இதை அறியாமல், மணப்பெண் தொடர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார். இந்த வைரலான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பிறகு 7.6 லட்சம் பார்வைகளையும் 15,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை, இணையவாசிகள் சிலர் கலாய்த்து வருகின்றனர். பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.