ஒடிசாவில் 3 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த பாதையில் அடுத்தடுத்து வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில், சரக்கு ரயில்கள் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
- ஹவுரா-பூரி எக்ஸ்பிரஸ் ரயில் (12837)
- ஹவுரா-சர் எம் விஸ்வேஸ்வரயா டெர்மினல் எக்ஸ்பிரஸ் (12863)
- ஹவுரா-சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் (12839)
- ஷாலிமர் - பூரி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12895)
- ஷாலிமார்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸ் (20831)
- சாந்த்ராகாச்சி-பூரி Special journey (02837)
- சீல்டா-பூரி துரந்தோ எக்ஸ்பிரஸ் (22201)
- பாலசோர்-புவனேஸ்வர் Special journey (08411)
- ஜலேஸ்வர்-பூரி Special journey (08415)
- பாங்கிரிபோசி-பூரி எக்ஸ்பிரஸ் (12891)
- காரக்பூர்-குர்தா சாலை எக்ஸ்பிரஸ் (18021)
- காரக்பூர் -பத்ரக் Special journey (08063)
- ஹவுரா-பூரி எக்ஸ்பிரஸ் (22895)
- ஹவுரா-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் (12703)
- ஷாலிமார்-பூரி எக்ஸ்பிரஸ் (12821)
- ஹவுரா-சர் எம் விஸ்வேஸ்வரிவா டெர்மினல் எக்ஸ்பிரஸ் (12245)
- பாலசோர்-பத்ரக் Special journey (08031)
- ஷாலிமார்-ஹைதராபாத் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (18045)
- ஹவுரா-திருப்பதி எக்ஸ்பிரஸ் (20889)
- பத்ரக்-ஹவுரா எக்ஸ்பிரஸ் (18044)
- ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை-காரக்பூர் எக்ஸ்பிரஸ் (18038)
- ஹவுரா-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (12073)
- புவனேஸ்வர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் (12074)
- ஹவுரா-பூரி சதாப்தி எக்ஸ்பிரஸ் (12277)
- பூரி-ஹவுரா சதாப்தி எக்ஸ்பிரஸ் (12278)
- பத்ரக்-பாலசோர் Special journey (08232)
- பூரி-ஷாலிமார் Special journey (12822)
- பூரி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் (12815)
- பத்ரக்-காரக்பூர் Special journey (08064)
- பூரி-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22896)
- பூரி-ஜலேஸ்வர் Special journey (08416)
- பூரி-பாட்னா Special journey (08439)
மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்
- பூரி-புது டெல்லி புருசோத்தம் எக்ஸ்பிரஸ் (12801) - ஜகாபுரா & ஜரோலி வழியாக இயக்கப்படும்.
- பூரி-ரிஷிகேஷ் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் (18477) - அங்குல்-சம்பால்பூர் நகரம்-ஜார்சுகுடா சாலை வழித்தடத்தில் இயக்கம்.
- பூரி-பாட்னா ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் (03229) - பூரியில் இருந்து ஜகாபுரா-ஜரோலி வழியே இயக்கப்படும்.
- சென்னை-ஹவுரா மெயில் எக்ஸ்பிரஸ் (12840) - ஜகாபுரா-ஜரோலி வழித்தடத்தில் இயக்கப்படும்.
- வாஸ்கோடகாமா-ஹவுரா அமராவதி எக்ஸ்பிரஸ் (18048) - வாஸ்கோவில் இருந்து ஜகாபுரா-ஜரோலி வழித்தடத்தில் இயக்கம்.
- செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22850) - செகந்திராபாத்தில் இருந்து ஜகாபுரா மற்றும் ஜரோலி வழியாக இயக்கம்
- சம்பல்பூர்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22804) - சம்பல்பூரில் இருந்து சம்பல்பூர் நகரம்-ஜார்சுகுடா வழித்தடத்தில் இயக்கம்
- பெங்களூரு-கௌகாத்தி எக்ஸ்பிரஸ் (12509) - பெங்களூரில் இருந்து விஜயநகரம்-திட்டிலாகர் - ஜார்சுகுடா-டாடா வழித்தடத்தில் இயக்கம்
- தாம்பரம்-புதிய டின்சுகியா எக்ஸ்பிரஸ் (15929) - தாம்பரத்தில் இருந்து ரனிடால்-ஜரோலி வழித்தடத்தில் இயக்கம்
- சாந்த்ராகாச்சி-சென்னை எக்ஸ்பிரஸ் (22807) - டாடாநகர் வழியாக இயக்கப்படும்
- திகா-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் பயணம் (22873 ) - டாடாநகர் வழியாக இயக்கப்படும்.
- திகா-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் (22873) டாடாநகர் வழியாக இயக்கம்
- ஷாலிமார்-பூரி ஸ்ரீ ஜகன்னாத் எக்ஸ்பிரஸ் (18409) - டாடாநகர் வழியாக இயக்கப்படும்
- ஹவுரா-மைசூரு எக்ஸ்பிரஸ் (22817) - டாடாநகர் வழியாக இயக்கப்படும்
இவற்றில் சில ரயில்கள் ஏற்கனவே ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் பயணத்தை தொடங்கி விட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.