அமைச்சர், முதல்வர் மற்றும் பிரதமர் இவர்களில் யாரேனும் குற்றச் செயலில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டாலோ அல்லது சிறையில அடைக்கபட்டாலோ அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய சட்டத்தை தாக்கல்  இன்று நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யடவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சட்டம் சொல்வது என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையும் நிலையில் மத்திய அரசு மூன்று புதிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளது. இதில் முக்கியமாக மாநில அமைச்சர்கள் 5 வருடம் சிறை தண்டனை பெறக்கூடிய வழக்கில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் யார் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களது பதவி தானாக பறிபோகும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது . அதாவது குற்றவாளியா நிரூபிக்கப்படணும்னு எந்த அவசியமும் இல்ல. வழக்கு இருந்தாலே போதுமானது. 30 நாள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டால் தானாகவே பதவி பறிபோகும். 

எதிக்கட்சிகள் கண்டனம்:

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ மத்திய அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகல் குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியப் இருவரும் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபடியே முதல்வர் பணிகளை மேற்க்கொண்டார், அதே போல் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் சிறையில் சென்று அமைச்சராக இருந்தார்ஆனால் தற்போது இந்த மசோதவானது நிறைவேற்றப்பட்டால் 31வது நாளில் பதவி பறிக்கப்படும்.

ஏற்கெனவே பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை வைத்து பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக வசைப்பாடி வருகின்றன, மகாராஷ்டிரா, பீகார், கோவா போன்ற மாநிலங்களில் பாஜக குதிரை பேரத்தை நடத்தி ஆட்சியை பிடித்தாக ஏற்கெனவே காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன

அப்படி நடந்தால் அந்த மாநிலத்தை கட்சியை பலவீனப்படுத்தி, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாஜக ஆட்சியை பிடித்தது போலவே, மற்ற மாநிலங்களிலும் இதே பாணியை வைத்து ஆட்சியை பிடிக்கவே இந்த மசோதாவை கொண்டு வர பாஜக துடிப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. 

காங்கிரஸ் எம்.பி

இது குறித்து காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி "எதிர்க்கட்சிகளை சீர்குலைப்பதற்கான சிறந்த வழி, எதிர்க்கட்சி முதல்வர்களைக் கைது செய்ய பாரபட்சமான மத்திய அமைப்புகளை கட்டவிழ்த்து விடுவதும், தேர்தல் முறையில் அவர்களைத் தோற்கடிக்க முடியாவிட்டாலும், தன்னிச்சையான கைதுகள் மூலம் அவர்களை அகற்றுவதும் ஆகும்" என்று காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி/

மஹூவா மொய்த்ரா:

எதிர்க்கட்சியின் கணிப்புகள் நிறைவேறியுள்ளன. 240 எம்.பி.க்களை மட்டுமே கொண்ட பாஜக அரசியலமைப்பை மாற்றுகிறது. புதிய மசோதா கூட்டாட்சி அமைப்பு, நீதித்துறை இரண்டையும் புறக்கணிக்கிறது. மத்திய அரசு இப்போது ED மற்றும் CBI ஐப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதலமைச்சரை போலி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யலாம்" என்றார்