மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் தற்போது இருந்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அரசின் அடுத்த தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியானது.
அதன்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிய உள்ளது. இந்தச் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மத்திய அரசு இந்தப் பதவிக்கு முகுல் ரோக்டஹியின் பெயரை பரிசீலனை செய்ததாக கூறப்பட்டது. எனினும் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து வெங்கடரமணி இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டின் கர்ணல் அனில் சவுகான்:
நாட்டின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டின் கர்ணல் அனில் சவுகான் மத்திய அரசு நியமித்துள்ளது. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிற்கு வந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
பின்னர், நாட்டின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதியாக நரவனே நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முப்படைகளின் புதிய தலைமை தளபதியான அனில் சவுகான் 1961ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிறந்தவர். 1981ம் ஆண்டு 11வது கூர்கா ரைஃபிள் கிளப்பில் இணைந்து தனது ராணுவ சேவையைத் தொடங்கினார். அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமி மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் பயிற்சி பெற்றவர்.
ராணுவத்தில் ஆற்றிய கடுமையான சேவைகள் காரணமாக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அனில் சவுகான், வடக்குப் பிராந்தியத்தன் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கிழக்குப்பிராந்தியத்திற்கு 2019ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தவர். நாட்டிற்காக சுமார் 40 ஆண்டுகாலம் சேவையாற்றிய அனில் சவுகான் கடந்த 2021ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் தன்னுடைய சேவையை நாட்டிற்காக அனில் சவுகான் தொடர்ந்து கொண்டே இருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். தற்போது நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்திற்காக அனில் சவுகான் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவருக்கு பரம்விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத்சேவா பதக்கம், அடிவிசிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. புதிய தலைமை தளபதியாக தேர்வாகியுள்ள அனில் சவுகானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு இந்தியாவில் சவாலான பல பகுதிகளில் தலைமை தாங்கிய அனுபவம் வாய்ந்தவர். ஜம்மு – காஷ்மீரிலும் நெருக்கடியான சூழலில் பணியாற்றியுள்ளார். மேலும், அங்கோலா நாட்டில் ஐ.நா. சார்பில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றுள்ளார்.