இண்டிகோ விமானம்: இன்று காலை (செப்டம்பர் 2) காலை நாக்பூர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், பறவை மோதியதால் அவசர அவசரமாக திருப்பி விமான நிலையத்துக்கு திரும்பியது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானத்தில் 160 முதல் 165 பயணிகள் இருந்தனர். முன்னெச்சரிக்கையாக விமானம் திரும்பக் கொண்டுவரப்பட்டது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்தனர்

நாக்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 6E 812 என்ற விமானம் பறவை மோதியதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். விமானிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நாக்பூர் விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க முடிவு செய்தனர்.

விமானம் ரத்து செய்யப்பட்டது.

விமானத்தின் தொழில்நுட்ப பரிசோதனை மற்றும் பராமரிப்பு தேவை காரணமாக இன்று விமானமானது ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்குவதோடு மாற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளையும் விமானம் நிறுவனம் செய்துள்ளது. அதே நேரத்தில், டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானமும் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

இதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று , டெல்லியில் இருந்து இந்தூருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. தகவலின்படி, இரண்டாவது எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாக விமானிகளுக்கு எச்சரிக்கை வந்தது. இதன் பின்னர், ஏடிசி-க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமான நிலையத்தில் அவசரநிலையை அறிவிக்கப்பட்ட விமானமானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமான நிலையம் தரையிறங்குவதற்கு முன்பே தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளுக்கு ஏர் இந்தியா மாற்று விமானத்தையும் ஏற்ப்பாடு செய்திருந்தது. இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தும், மேலும் தீ சமிக்ஞை ஏன் வந்தது என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.