வனவிலங்குகள் அவ்வப்போது பிடிக்கப்பட்டு மிருகக்காட்சிசாலைகளில் அல்லது வனவிலங்குப் பூங்காக்களில் பராமரிப்புக்கும் பார்வையாளர்களுக்குமாக ஒப்படைக்கப்படும். அந்தவகையில் 2009-ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்ட மிக வயதான சிங்கம் ஒன்று அண்மையில் மூப்பின் காரணமாக சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவில் உயிரிழந்துள்ளது. ரவீந்திரா எனப் பெயரிடப்பட்ட அந்த சிங்கம் வயதின் காரணமாக உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிடிக்கப்பட்ட ரவீந்திரா முன்னொரு காலத்தில் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வனத்துறையின் (APCCF) வனவிலங்குகளின் கூடுதல் முதன்மை தலைமைப் பாதுகாவலர் கிளமென்ட் பென் இதுகுறித்துப் பேசுகையில், "சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் இருந்த சிறைபிடிக்கப்பட்ட ஆண் சிங்கம் ரவீந்திரன் 17 வயதுடையது. வயது மூப்பு காரணமாக அந்தச் சிங்கம் திங்கள் மாலை இறந்தது. சிங்கம் வயது முதிர்ச்சியால் அவதிப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூப்பு தொடர்புடைய பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தது மேலும் கால்நடை மருத்துவர் குழுவின் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிங்கம் இருந்தது"
சிறைபிடிக்கப்பட்ட சிங்கத்தின் பிரேதப் பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெறும். ரவீந்திரா செப்டம்பர் 21, 2009 அன்று பனெர்கட்டா மிருகக்காட்சிசாலையில் இருந்து சஞ்சய்காந்தி பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டது, அப்போது அதற்கு சுமார் நான்கு வயது.
சஞ்சய் காந்தி பூங்காவில் இருந்த சிறைபிடிக்கப்பட்ட புலி மற்றும் சிங்கங்களைக் கொண்டு அங்கே 12 ஹெக்டேர் அளவில் லயன் சஃபாரி 1990 களில் தொடங்கப்பட்டது, அதன் பின்னர் இது பூங்காவிற்கு வருகை தரும் மக்களின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சஞ்சய் காந்தி பூங்காவின் மீட்கப்பட்ட புலிகளைக் கொண்ட சஃபாரி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானது. பூங்காவின் சிறைப்பிடிக்கப்பட்ட சிங்கங்கள் மற்றும் புலிகள் மிகப்பெரிய அளவிலான ஈர்ப்புகளாகும். ஆனால், இவை முதுமை காரணமாகவோ அல்லது நோய் தாக்கியோ அடிக்கடி இறப்பதால், அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ரவீந்திரஸ் மரணத்தை அடுத்து சஞ்சய் காந்தி பூங்காவில் இப்போது 12 வயது நிரம்பிய ஜெஸ்பா என்ற ஒரே ஒரு சிங்கம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா நிர்வாகம் சஃபாரி தவிர தொடர்ச்சியாக ட்ரெக்கிங் ட்ரைலிங் உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.