மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் வாங்கும் உணவு பொருட்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை வெளியிட்டு நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஸொமாட்டோ :
மும்பையை சேர்ந்த ராகுல் கப்ரா என்பவர் Zomato உணவு டெலிவரி செயலி மூலம் வெஜ் பிளாக் பெப்பர் சாஸ், வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் காளான் மோமோ ஆகியவற்றை மும்பையின் கிழக்கு கண்டிவலியில் உள்ள தி மோமோ ஃபேக்டரியில் ஆடர் செய்திருக்கிறார். பின்னர் நேரடியாக கடைக்கு சென்று மேற்க்கண்ட அதே உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுருக்கிறார். எதார்த்தமாக இரண்டு பில்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுதுதான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. நேரடியாக ஆர்டருக்கான விலை 512 ரூபாய் . Zomato ஆர்டருக்கான விலை 690 ரூபாய். இதில் 75 ரூபாய் தள்ளுபடி வேறு. ஒரு ஆர்டருக்கு 34.76% விலை அதிகரிப்பு செய்கிறது ஸொமாட்டோ என குறிப்பிட்ட அந்த நபர் மேற்க்கண்ட ஸ்மாட்டோ ஆடருக்கு நான் 178 ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறேன் என தெரிவித்து கணக்கு விவரங்களையும் பதிவிட்டுள்ளார். ( (690-512)/512)
விவாதிக்கும் நெட்டிசன்கள் :
தனது LinkedIn பக்கத்தில் ராகுல் கப்ரா இதனை பகிர்ந்திருக்கிறார் . மேலும் " ஸொமாட்டோ உணவு சேவை வழங்குனருக்கு அதிக ஆர்டர்களைக் கொண்டு வருகிறது என்று வைத்துக் கொண்டால், இவ்வளவு அதிக விலையை வசூலிக்க வேண்டுமா? இந்த செலவு அதிகரிப்பைக் அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன் “ என தெரிவித்துள்ளார்.
அதற்கு கீழே கமெண்ட் செய்த ஒருவர் “ Zomato எந்த மெனுவையும் அதற்கான விலையையும் தீர்மானிக்கவில்லை. உணவகங்கள்தான் அதை நிர்ணயம் செய்கிறார்கள். காரணம் Zomatoக்கான தங்கள் கமிஷனை ஓரளவு ஈடுகட்ட வேண்டும் என விலையை உயர்த்துகிறார்கள்." என தெரிவித்தார் . மற்றொருவர் “பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துவிட்டது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.
ஸொமாட்டோ நிறுவனம் பதில் :
இதற்கு பதிலளித்த ஸொமாட்டோ நிறுவம் “ஹாய் ராகுல், வாடிக்கையாளருக்கும் உணவகத்திற்கும் இடையிலான இடைத்தரகர் தளமாகத்தான் Zomato இருக்கிறது. எங்கள் தளத்தில் உணவகங்கள் நிர்ணயிக்கும் விலைகளில் எந்தக் கட்டுப்பாட்டுகளும் இல்லை. நாங்கள் எங்களில் கருத்தை உணவகங்களுக்கு தெரிவித்து விட்டோம் . உணவு பங்குதாரர்கள் இதனை பார்க்க வேண்டும் “ என கோரிக்கை விடுத்துள்ளனர்.