மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரின் மனைவி ஸ்டுடி ஷர்மா (Stuti Sharma) இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் மதசார்ப்பற்ற கருத்துத்தை ட்விட்டரில் தெரிவித்ததற்காக பல்வேறு விமசர்னங்களை சந்தித்தார். தொடர்ந்து, பல்வேறு ட்ரோல்களுக்கு அடுத்து தான் பதிவிட்ட ட்வீட்டையும் டெலீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச பா.ஜ.க. மாநிலத் தலைவர் வி.டி. ஷர்மாவின் (VD Sharma) மனைவி ஸ்டுடி ஷர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மெடிக்கல் கடைக்கு சென்றது பற்றிய அனுபத்தை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதாவது, அன்றைய இரவு, ஸ்டுடி ஷர்மாவுக்கு மருத்து தேவைப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியில் உள்ள எல்லா மருந்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு ஒரே ஒரு மருந்து கடை மட்டும் திறந்திருந்தது. இரவு 11.30 மணிக்கு அந்த கடையிக் மருந்து வாங்கியதாவும், அது ஒரு இஸ்லாமியரின் கடை என்பதையும் குறிப்பிட்டு, மனிதம், மதச்சார்ப்பின்மை போன்றவைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார்.


ஸ்டுடி ஷர்மா டிவீட்டில், எனக்கு நேற்று இரவு மருத்து தேவைப்பட்டது. எல்லா மருந்து கடைகளும் மூடியிருந்ததன. ஒரே ஒரு மெடிக்கல் மட்டுமே திறந்திருந்தது. அது முஸ்லீம் ஒருவருடைய கடை. அக்கறை மிக்கவர். #HinduMuslimUnity.’ என்று பதிவு செய்திருந்தார்.


பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரின் மனைவியிடமிருந்து இப்படியொரு கருத்து வந்ததை அந்தக்கட்சியினர் விரும்பவில்லை. இவருடைய கருத்து சமூக வலைதளங்களில் வன்மத்துடன் ட்ரோல் செய்யப்பட்டது. இதையெடுத்து, ஸ்டுடி ஷர்மா தன் ட்வீட்டை நீக்கினார்.






இது குறித்து அவர் மற்றொரு டிவீட்டில், ’முந்தைய டிவீட்டை நான் டெலீட் செய்துவிட்டேன். என் கருத்துக்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாகியது. மதம் சார்ந்த சர்ச்சைகள் எழும்போது, அது தொடர்பாக கருத்துக்களை பகிர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. யாரையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை. இனிமேல் உள்ளதை கர்மா பார்த்துக்கொள்ளும்.”  என்று எழுதியிருந்தார்.






இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் ஸ்டுடி ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.  


ராம நவமி அன்று நடந்த பல்வேறு மத கலவரங்களின் வெளிபாடாக இந்நிகழ்வு இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதான பாஜகவின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றுதான் இதுவும். மதச்சார்ப்பற்ற கருத்துக்களை எதிர்க்கும் பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கும் மனிதமாண்பிற்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.