தமிழ்நாடு:



  • சேலம் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

  • ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிகச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை ஆகிய 2 நிகழ்ச்சிகள் மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • வரும் ஜூன் 7 முதல் 9ம் தேதி வரை சென்னையில் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு

  • 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் சென்னையில் கலைஞர் அரங்கம்: நூற்றாண்டு விழா இலச்சினை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் - பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என உயர்நீதிமன்றம் உத்தரவு

  • அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

  • சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை, புதிய குழாய் பதிப்பு முடிந்ததும் கூடுதலாக 1,000 மி.லிட்டர் நீர் சப்பளை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

  • மகளில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சி இன்று திறப்பு - அமைச்சர் உதயநிதி திறந்து வைக்கிறார்.

  • பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு


இந்தியா: 



  •  ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 

  • பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பிரிஜ் பூஷனுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தர வேண்டும்  நடிகை நமீதா தெரிவித்துள்ளார். 

  • பாலியல் தொல்லையால் (போக்சோ) பாதிக்கப்பட்ட நபர்  குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக சாட்சியம் சொல்லாவிட்டால் அந்த நபருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் பெரிய போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

  • சந்திரயான் 3 திட்டம் ஜூலை மாதத்தில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

  • ”புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.” - எம்.பி, சு.வெங்கடேசன்


உலகம்: 



  • அணு ஆயுதம் குறித்த தரவுகளை ரஷ்யாவிற்கு தரமாட்டோம் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  • குஜராத் நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால் 30 பேருக்கு மேற்பட்டோருக்கு கண் தொற்று - இலங்கை அரசு புகார்

  • இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

  • பிரேசிலில் முன்னாள் அதிபர் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு: 



  • தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனின் இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

  • இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி