தமிழ்நாடு:



  • கன்னியாகுமரியில் 45 மணி நேரம் செய்த தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

  • தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு

  • தமிழ்நாட்டில் பா.ஜ.க. 1 அல்லது 2 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிப்பு

  • தமிழ்நாட்டில் இரட்டை இலக்கில் பா.ஜ.க. வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை

  • இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை ஜூன் 4ம் தேதி மாலை அல்லது ஜூன் 5ம் தேதி முடிவு செய்வோம் – டி.ஆர்.பாலு

  • இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது? இந்தியன் 2 இசை வௌியீட்டு விழாவில் கமல்ஹாசன்


இந்தியா:



  • வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

  • அருணாச்சல பிரதேசத்தில் 10 தொகுதிகள் வெற்றியுடன் அமோகமாக தொடங்கிய பா.ஜ.க.

  • 7ம் கட்ட தேர்தலில் உத்தேசமாக 62.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

  • நாடு முழுவதும் 7 கட்ட மக்களவைத் தேர்தலும் நேற்றுடன் நிறைவு – நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

  • நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி பா.ஜ.க. 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும் – கார்கே

  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் சரண்


விளையாட்டு:



  • உலகக்கோப்பை டி20 தொடர் இன்று தொடக்கம் – முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா மோதல்

  • டி20 உலகக்கோப்பைக்காக அமெரிக்காவில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

  • டி20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித்சர்மாவை பார்க்க மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் அமெரிக்க போலீசாரால் கைது