தமிழ்நாடு:



  •  மக்களவை தேர்தலில் வெற்றி - தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் இன்று டெல்லி பயணம் 

  • 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - தரவரிசை பட்டியல் வெளியீடு 

  • திருச்சியில் 14 ஆயிரம் வாக்குகள் பெற்ற சுயேட்சை வேட்பாளர் - துரை வைகோவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக அவருக்கு ஓட்டுகள் விழுந்ததா என தொண்டர்கள் குழப்பம் 

  • பள்ளி, கல்லூரிகள் திறப்பு - பழைய பஸ் பாஸ் அட்டையை பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை அறிவிப்பு

  • மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் பிரபலித்துள்ளது - டிடிவி தினகரன் 

  • மக்களவை தேர்தலில் தோல்வி - தமிழ்நாடு அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல் 

  • தேர்தல் தோல்விகளுக்கு தொண்டர்களை பழக்குவது பாவம் - எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 

  • சசிகலாவை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு 

  • விருதுநகரில் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டதில் சூழ்ச்சி இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சனம் 

  • விருதுநகர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேமுதிக இமெயில் வாயிலாக தேர்தல் ஆணையத்தில் மனு

  • வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணைய சத்ய பிரதா சாஹூ தகவல்

  • சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி 

  • நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுக கூட்டணிக்கு 40க்கு 40 கிடைத்திருக்காது - எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு

  • இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த செட் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

  • தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை 


இந்தியா: 



  • அக்னிபாத் உள்ளிட்ட பாஜகவின் திட்டங்கள் மீது அதிருப்தி - பட்டியலை வெளியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 

  • 3வது முறையாக பிரதமராக நாளை மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் 

  • ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12ல் பதவியேற்கிறார் - பிரதமர் மோடிக்கு அழைப்பு

  • மருத்துவ காரணங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனு - நீதிமன்றம் தள்ளுபடி 

  • இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவில் மோசடி - பிரதமர் மோடி, அமித்ஷா மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  • சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதி எம்.பி.,யான நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் 

  • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளை கேட்ட சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி - பாஜகவுக்கு கடும் நெருக்கடி 


உலகம்:



  •  சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே கடும் மோதல் - 100 பேர் உயிரிழப்பு

  • காஸாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் - 39 பேர் உயிரிழப்பு

  • பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • 2024 டி20 உலகக்கோப்பை; அயர்லாந்து - கனடா அணிகள் இன்று மோதல் 

  • டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி

  • அமெரிக்காவின் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து

  • கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி

  • டி20 உலகக்கோப்பை போட்டியில் நமீபியாவை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி வெற்றி