கடற்பாசி தொழிலை ஊக்குவிக்க, புதிய இறக்குமதி வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், 'இந்தியாவுக்கு நேரடியாக கடற்பாசிகளை இறக்குமதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை' அறிவித்துள்ளது.


கடற்பாசி தொழில்:


அனைத்து நடவடிக்கைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு பிரச்சனைகளை மையமாக் கொண்டு,  கடலோர கிராமங்களின் முக்கிய பொருளாதார உந்துதலாக, கடற்பாசி தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, மீனவ சமுதாயத்தின் வாழ்வாதார நிலைத்தன்மை மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதே, இந்த முயற்சியின் நோக்கமாகும்.



இந்த வழிகாட்டுதல்கள், உயர்தர விதை பொருட்கள் அல்லது ஜெர்ம்பிளாசத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உதவுவதுடன், விவசாயிகளுக்கு தரமான விதை இருப்பு கிடைப்பதை உறுதி செய்ய உள்நாட்டு பெருக்கத்திற்கும் வழிவகுக்கும்.  வணிக ரீதியாக மதிப்புமிக்க இனங்களின் உற்பத்திக்கு போதுமான அளவு விதை கிடைப்பதிலும், பொதுவாக பயிரிடப்படும் கடற்பாசி இனங்களான கப்பாபைகஸின் விதை பொருட்களின் தரம் குறைவதாலும்  இந்தியாவில் கடற்பாசி நிறுவனங்களின் வளர்ச்சியானது சவாலை எதிர்கொள்கிறது.


கடற்பாசி பூங்கா:



2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் கடற்பாசி உற்பத்தியை 1.12 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கடற்பாசி துறையில் புரட்சியை ஏற்படுத்த மத்திய அரசின் முன்னோடித் திட்டமான  பிரதமரின் மீன்வள மேம்பாடு திட்டம் (PMMSY) உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடற்பாசி வளர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் முக்கியமானது, தமிழ்நாட்டில் ரூ .127.7 கோடி மொத்த முதலீட்டில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா நிறுவப்பட்டதாகும்.



இந்த வழிகாட்டுதல், பொறுப்பான கடற்பாசி சாகுபடியை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும். மேலும், புதிய கடற்பாசி வகைகளின் இறக்குமதி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைத் தூண்டும். சிவப்பு, பழுப்பு மற்றும் பச்சை பாசிகளைச் சேர்ந்த பல்வேறு வகையான கடற்பாசி இனங்களின்  உற்பத்தியை அதிகரிக்க வழிவகுப்பதுடன், கீழ்நிலை நீரோட்ட கடற்பாசி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டும் தொழில்களின் வளர்ச்சிக்கு வகை செய்யும். இது கிராமங்களில் கூடுதல் வாழ்வாதாரத்தை உருவாக்கும் அதே நேரத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிக்கும்.
இந்த வழிகாட்டுதல்களின்படி, இந்தியாவிற்குள் நேரடி கடற்பாசி இறக்குமதி செய்ய, இறக்குமதியாளர்கள் மீன்வளத் துறைக்கு விரிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அங்கீகாரம் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட துறை நான்கு வாரங்களுக்குள் இறக்குமதி அனுமதியை வழங்கும். இது உயர்தர கடற்பாசி ஜெர்ம்பிளாசத்தை இறக்குமதி செய்வதற்கு வகை செய்யும்.


மத்திய அரசு அறிவுறுத்தல்:



வழிகாட்டுதல்கள் இந்தியாவிற்குள் நேரடி கடற்பாசிகளை இறக்குமதி செய்வதற்கான விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்குகின்றன. இந்த செயல்முறை, பாதுகாப்பாகவும், சுமூகமாகவும், பொறுப்புடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. 


ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் இந்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.