உத்தரப் பிரதேசத்தில் இந்தியன் ரோட் காங்கிரஸின் 81ஆவது அமர்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2024ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்காவின் சாலைகளை விட உத்தரப் பிரதேசத்தின் சாலைகளை சிறப்பாக ஆக்குவோம் என்றார்.


உத்தரப் பிரதேசத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், "2024ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்காவை விட உத்தரபிரதேச சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும். இதற்காக மோடி அரசு வரும் நாட்களில் உத்தரப் பிரதேசத்திற்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளது.


தற்போது எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஷாஹாபாத்-ஹர்தோர் பைபாஸ், ஷாஜஹான்பூர் முதல் ஷாஹாபாத் பைபாஸ், மொராதாபாத்-தாகூர்த்வாரா- காஷிபூர் பைபாஸ், காஜிபூர்-பல்லியா பைபாஸ், 13 பாலத்தின் மேல் அமைக்கப்படும் சாலைகள் தவிர, மொத்தம் 8,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


 






இது ஆரம்பம் மட்டுமே, முழு படமும் இன்னும் வரவில்லை. நல்ல சாலைகள் அமைப்பதற்கு அரசாங்கத்திடம் பணப் பற்றாக்குறை இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் தரமான சாலைகளை நிர்மாணிப்பதன் மூலம் நாட்டில் விரைவான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்ய, சாலை உள்கட்டமைப்பின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்துகிறேன்.


இந்திய சாலை காங்கிரஸின் இந்த 3 நாள் அமர்வு, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சாலைத் துறை வல்லுநர்களை ஒன்றிணைந்து பாதுகாப்பான மற்றும் நிலையான சாலைகளை நோக்கி அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்" என்றார்.


இதையடுத்து, தலைநகர் லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டிலும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.