Milkipur bypolls Result: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மில்கிபூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.வின் சந்தபானு பாஸ்வான் (Chandabhanu Paswan) அதிரடியாக வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் அமைந்துள்ள தொகுதி மில்கிபூர். இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் Awadhesh Prasad மக்களவைத் தேர்தலில் ஃபசியாபாத் தொகுதியில் போட்டியில் (Faizabad) வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகினார். பிப்ரவரி, 5-ம் தேதி மில்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.சமாஜ்வாதி கட்சி அவதேஷ் பிரசாத் மகன் அஜித் பிரசாத்தை களமிறக்கியது. பாஜக சந்திரபான் பஸ்வானை நிறுத்தியது. இந்தத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே மீண்டும் போட்டி நிலவியது. 31 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் சந்திரபான் பாஸ்வான் 61, 710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சியின் அஜித் பிரசாத் 84,687 வாக்குகள் பெற்றிருந்தார். சந்திரபான் பாஸ்வான் 1,46,397 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது ராமர் கோயில் திறக்கப்பட்ட அயோத்தியில் உள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக கட்சி தோல்வியடைந்திருந்தது. மில்கிபூர் தொகுதி அயோத்தியில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஃப்சியாபாத் மக்களவைத் தொகுதியில் இருக்கிறது. அரசியல் களத்தில் பல்வேறு நிகழ்வுகளை சந்தித்த பகுதி இது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதிலிருந்து ஃபசியாபாத் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கனவாக இருந்தது. அதற்காகவே அங்கிருந்த இந்து ஓட்டுகளை கைப்பற்றுவதில் பா.ஜ.க. முனைப்பு காட்டியது.
அவதேஷ் பிரசாத், 2012-2022 வரையிலான காலத்தில் மில்கிபூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். 2017-ம் தேர்தலில் பா.ஜ.க.வின் பாபா கோரக்காந்த் வெற்றி பெற்றார். அந்த வெற்றி மோடி அலை காரணமாக அமைந்தது. மில்கிபூர் தொகுதி அரசியல் வரலாற்றில் காங்கிரஸ், சி.பி.ஐ., சமாஜ்வாதி ஆகிய கட்சிகளிடம் இருந்தது. அதன்பிறகு 1990-களில் ராம் ஜென்மபூமி விசயம் பாஜாவிற்கு வெற்றியை பெற்று தந்ததாக பார்க்கப்படுகிறது. மில்கிபூர் இடைத்தேர்தலிலும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்திரபானு பாஸ்வானுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மில்கிபூர் தொகுதியை சமாஜ்வாதி கட்சியிடமிருந்து பாஜக கைப்பற்ற திட்டமிட்டப்படி, வெற்றியடைந்துள்ளது. சந்திரபான் பாஸ்வான், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆக்யோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாக்காளர்கள் ஆதரவளித்ததற்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.