மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஶ்ரீதரன் கடந்த கேரள சட்டமன்றத் தேர்தலின் போது பாஜகவில் இணைந்தார். அத்துடன் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் பாஜகவின் முதல் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டார். எனினும் அந்தத் தேர்தலில் பாஜக கடும் தோல்வியை தோல்வியை தழுவியது. 


மேலும் ஶ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடை வயது மூப்பு காரணமாக இனிமேல் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாது. நான் பாலாக்காடு தொகுதியில் தோல்வி அடைந்த போது எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது நான் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். 


இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் முதல் மெட்ரோ ரயில் சேவையை வடிவமைத்தவர் என்ற பெருமையை ஶ்ரீதரன் பெற்று இருந்தார். அதன்பின்னர் அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்பட்டார். 2021ஆம் ஆண்டு கேரள சட்டமன்ற தேர்தலின் போது இவரை முன்வைத்து பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. எனினும் அந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. 


மேலும் படிக்க: ''என் பொண்ணு சாகவே இல்லை'' - பெரிய ட்விஸ்ட் வைத்த இந்திராணி.. குழப்பத்தில் போலீசார்!!