பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தலைவர்களிடம் மரியாதையும் நடத்துக்கொள்ள வேண்டும் எனவும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் மீதான அவரது அணுகுமுறை கடுமையாக உள்ளது  என மனோஜ் திவாரி விமர்சனம் தெரிவித்துள்ளார்.


பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை கங்கனா ரனாவத். சுசாந்த் சிங் ராஜ்புத் இறப்பையொட்டி பாலிவுட்டின் வாரிசு அரசியல் மீது வைத்த விமர்சனம் தொடங்கி, சமீப காலமாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சையாகிவருகின்றன. குறிப்பாக கடந்த 1947 ஆம் ஆண்டு நாடு பெற்ற சுதந்திரம் வெறும் பிச்சை என்று விமர்சித்த கங்கனா, வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்களை விமர்சித்தும், ஷாஷீன் பாகில் போராடிய ஒரு பெண்மணியை நூறு ரூபாய்க்கு வந்தவர் என்றும் விமர்சித்திருந்தார். இதனையடுத்து சோசியல் மீடியாவில் கங்கனா ரனாவத்திற்கு எதிராக பல்வேறு எதிர்மறை கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் மகாராஷ்டிரா அரசிடம் அவரது அணுகுமுறை கடுமையாக இருந்தது எனவும் இது சரியல்ல என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் தான் நடிகராக இருந்து அரசியல் வாதியாக மாறியிருக்கும்  மனோஜ் திவாரி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.





அதில், சமீபத்தில் கங்கனா ரனாவத் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக தலைவர்களைப்பற்றி பேசும் போது மரியாதையுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர் ஒருவரின் கருத்தை நேரடியாக ஒருவரைத்தாக்கும் அளவுக்கு சத்தமாக இருக்கக்கூடாது எனவும், கலைஞர்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதோடு மகாராஷ்டிரா அரசாங்கத்தின் மீதான அவரது நடத்தை மிகவும் கடுமையாக உள்ளதாக எனத் தெரிவித்துள்ளார்


குறிப்பாக கடந்த காலங்களில் மும்பை மற்றும் காவல்துறை கங்கனா ரனாவத் கூறிய கருத்து மிகவும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.  மேலும் இந்த அணுகுமுறை கடுமையாக இருந்தது எனவும் அது சரியல்ல என கூறியுள்ளார். இதோடு நீங்கள் நினைப்பதை நீங்கள் கூறலாம், ஆனால் நீங்கள் மரியாதையுடன் உங்கள் எல்லைக்குள் இருக்க வேண்டும், அதே சமயம் ஒருவரை அவமரியாதையாகப் பேசுவது இந்த நாட்டின் கலாச்சாரம் அல்ல என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயகம் குடிமக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையை அளிக்கிறது. ஆனால் அதற்காக தேவையில்லாமல் பேசுவது பிரச்சனையை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். எனவே இனிமேல் இதுப்போன்று நடந்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நமக்கு முந்தைய அரசியல் தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என  பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மனோஜ் திவாரி அட்வைஸ் செய்துள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.