2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாசார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார். இந்த அறிவிப்பில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை விருதை வென்றுள்ளார். மொத்தமாக 9 விருதுகளை வென்றுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ 2024-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கொடைக்கானல் பகுதியில் உள்ள பிரபலமான குணா குகையை மையப்படுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் மாபெரும்வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இப்படம் மலையாள சினிமா வரலாற்றில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற மகத்தான சாதனையை படைத்தது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு காரணம் தமிழ்நாட்டில் அதற்கு கிடைத்த வரவேற்பு தான். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை (சிதம்பரம்), சிறந்த ஒளிப்பதிவு (சிஜூ காலித்), சிறந்த துணை நடிகர் (சௌபின் சாகிர்), சிறந்த கலை இயக்கம் (அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலி வடிவமைப்பு (சிஜின், அபிஷேக்), சிறந்த ஒலிக்கலவை (சிஜின்,பசல்), சிறந்த பாடலாசிரியர் (வேடன்) உள்ளிட்ட 9 விருதுகள் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது
ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரமயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராகவும், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்ததற்காக புதுமுகமான ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.