இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு கருத்துக்களை பதிவிடுவார். அது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகளை பெறும். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட வீடியோவோடு, அவர் எடுத்துள்ள நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “ கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்கூட்டரை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, அதனை ஓட்டி வருகிறார். அதனை கண்ட இருவர் பேர் அவரிடம் பேசுகின்றனர். அவர்கள் அவரிடம் வாகனத்தை ஸ்டார்ட் செய்தும் காண்பிக்க சொல்ல அவரும் ஸ்டார்ட் செய்து காண்பிக்கிறார்.
மேலும் பேசிய அந்த மாற்றுத்திறனாளி, தான் கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாக இந்த வண்டியை ஓட்டி வருவதாகவும், தனக்கு மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தை இருப்பதாகவும், அவர்களுக்காக தான் பணிபுரிந்து வருவதாகவும் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், இறுதியாக எல்லாம் கடவுளின் அருள் என்று பேசி சென்றார்”
இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா “ இது எனது டைம் லைனில் கிடைத்த வீடியோ, இது எவ்வளவு பழமையானது, எங்கிருந்து வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இந்த நபரை கண்டு நான் ஆச்சரியமடைகிறேன். காரணம் தன்னிடம் உள்ள குறையை குறையாக கருதாமல், தன்னிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றி உள்ளவராக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபரை மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டில் பிசினஸ் அசோசியேட் சேர்த்துக்கொள்ளவும் பரிந்துரை செய்துள்ளார். இவரது இந்த நடவடிக்கை தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்