மகாராஷ்ட்ராவில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த நபருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் ஒரே நபரை இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்டது நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி. பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது தந்தை அண்மையில் உயிரிழந்தார். பிங்கியும், ரிங்கியும் தாயுடன் வசித்து வந்தனர். தாய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் வாடகை காரை பயன்படுத்தியுள்ளனர். அப்போது பழக்கம் ஏற்பட்ட அதுல் மீது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ரிங்கி மற்றும் பிங்கி என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம் என ஒன்றாக பயணித்து வந்தனர். சிறுவயது முதலில் இருந்தே ஒன்றாக இருந்து வந்ததால் வரும் காலங்களில் பிரிந்து விடுவோமோ என்ற அச்சம் நிலவியது
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அதுல் தனது பெற்றோரிடம் சம்மதம் கோரினார். அவர்களும் பச்சைக் கொடி காட்டியதால் கடந்த 2-ம் தேதி சோலாப்பூரின் அக்லுஜ் பகுதியில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது இரட்டை சகோதரிகள் பிங்கியும் ரிங்கியும் மணமகன் அதுலுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த திருமணத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.
இருப்பினும், புதுமணத் தம்பதிகள் மற்றும் மணமகன் அவர்களின் விருப்பப்படி விஷயங்கள் நடக்கவில்லை. இரண்டு சகோதரிகளை திருமணம் செய்ததற்காக அதுல் மீது ஐபிசி பிரிவு 494 இன் கீழ் அறிய முடியாத குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சோலாப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே கூறினார்.
புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. பலரும் இந்த திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
“கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது, வேறு திருமணம் செய்துக் கொண்டால் அந்த திருமணம் செல்லாததாக இருக்கும் பட்சத்தில், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு விளக்கத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும்” என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494 கூறுகிறது. சகோதரிகள் பிங்கி மற்றும் ரிங்கியுடன் அதுலின் திருமணத்தின் சட்டப்பூர்வ செல்லுபடியை பல இணையவாசிகள் கேள்வி எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது