மின்சாரம் தாக்கியதில் நிலைகுலைந்த மாட்டை அருகில் இருந்த கடைக்காரர் ஹீரோ போல செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். இதுபற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தில் மாடு ஒன்று மின்சாரம் தாக்கி வலியில் துடித்து கொண்டிருந்தது. அப்போது, அருகில் இருந்த கடைக்காரர், மாட்டை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மின்சார கம்பம் அருகே மாடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, ஈரமான கம்பத்தை மாடு தற்செயலாக தொட்டுவிட்டது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் மாடு வலியால் துடித்து கொண்டிருந்தது.
அப்போது, துரிதமாக செயல்பட்ட அருகில் இருந்த கடைக்காரர், மாட்டை காப்பாற்ற முயற்சித்தார். பின்னர், அந்த வழியாக சென்றவர்களும் அவருடன் சேர்ந்து மாட்டை காப்பாற்றினர். இறுதியில், கீழே விழந்த மாடு மெதுவாக எழுந்து சாலை கடந்து சென்றுவிட்டது. இது பற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக, துரிதமாக யோசித்து மாட்டை காப்பாற்றியவரை அனைவரும் பாராட்டினர்.
இந்த வீடியோவை பகிர்ந்த சமூகவலைதள பயனாளி ஒருவர், "மனிதாபிமானம் என்றால் இதுதான்...! மின்சாரம் தாக்கிய பசுவை அவர் காப்பாற்றினார்" என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மற்றொரு நபர் ட்விட்டர் பக்கத்தில், "மான்சாவில், மாடு ஒன்று மின்சாரம் தாக்கி தவிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஒரு கடைக்காரர் மாட்டை துணியால் இழுத்தார். அது பசுவின் உயிரைக் காப்பாற்றினார். உண்மையில் இந்த செயல் முழுக்க முழுக்க கருணையை பிரதிபலிக்கிறது. அந்த கடைக்காரருக்கு கடவுள் அனைத்தையும் அளிப்பார்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்