உலகம் முழுவதும்  கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அவ்வப்போது அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. 


இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்படுகிறது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மராத்திய மக்கள் புத்தாண்டு கொண்டாடும் வேளையில் நம்முடைய மாநிலத்தில் இனிமேல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார். 


 






அம்மாநில அரசின் அறிவிப்பின்படி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை. எனினும் மக்கள் சில நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஒருநாள் கொரோனா தொற்று 100க்கும் கீழே குறைந்துள்ளது. தற்போது அங்கு 964 பேர் மட்டுமே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே அம்மாநில அரசு தற்போது இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண