தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுத்த இளைஞருக்கு மின்சாரம் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


ஞானஸ்தானம்


மத வழிபாடுகளின் அவரவர்களுக்கென தனித்தனி வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் வைத்திருப்பார்கள். அந்த வகையில் கிறிஸ்துவர்களின் வழிபாட்டு சடங்கின் படி ஞானஸ்தானம் என்பது உண்டு. புனித நீரில் மூழ்க வைத்து ஜெபம் செய்து ஞானஸ்தானம் வழங்குவார்கள். பொதுவாக குழந்தைகள் பிறந்தால் குறிப்பிட்ட மாதத்துக்குப் பின் இந்த ஞானஸ்தானம் செய்யப்படும்.இப்படியான நம்பிக்கையின்படி இளைஞர் ஒருவருக்கு பாதிரியார் ஞானஸ்தானம் செய்தபோது அது எதிர்பாராதவிதமாக உயிருக்கே ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது.




மைக்கால் வந்த வினை..


மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சலிஸ்பரி பார்க் பகுதியில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த தேவாலயத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர் ஞானஸ்தானம் வேண்டியுள்ளார். அதன்படி பெரிய தொட்டிக்குள் புனிதநீர் நிரப்பி இளைஞரை அதற்குள் இறக்கிய பாதிரியார் ஜெபம் செய்து ஞானஸ்தானம் வழங்கத் தொடங்கினார். தன்னுடைய ஜெபம் தேவாலயம் முழுவதும் கேட்க வேண்டுமென்பதற்காக அவர் கையிலேயே மைக் ஒன்றையும் வைத்துக்கொண்டு இளைஞரை நீருக்குள் மூழ்க வைத்து ஞானஸ்தானம் செய்துகொண்டிருந்தார். ஒருமுறை மூழ்க வைத்து ஞானஸ்தானம் வழங்கிய பாதிரியார் கையில் இருந்த மைக்குடன் இளைஞரின் ஈரமாக உடம்பை மறுபடி பிடித்தார். மைக்கில் ஒயர் பிசிர் இருந்ததாலும், ஈரமான உடம்பு என்பதாலும் திடீரென மின்சாரம் பாய்ந்து இளைஞர் தண்ணீருக்குள்ளே தத்தளித்து விழுந்தார். அவருடன் சேர்ந்து மைக்கும் தண்ணீருக்குள் விழ நிலைமை இன்னும் மோசமானது. 


மீண்டும் மீண்டும் மின்சாரம்..


ஞானஸ்தானத்தை செய்த பாதிரியார் ஒருபக்கம் பதறி நடுங்க, அந்த தேவாலயத்தில் இருந்த இளைஞரின் உறவினர்களும் நண்பர்களும் செய்வதறியாது திகைத்துபோயினர்.உடனடியாக அருகில் இருந்த ஒருவர் மைக் ஸ்டேண்டை எடுத்து வெளியே  எடுக்க அப்போதும் வரமாட்டேன் என்பது போல மைக் மட்டும் தனியாக தண்ணீருக்குள் விழுந்தது. உடனடியாக மற்றொருவர் மைக்குக்கான மின்சாரத்தை துண்டிக்க மின்சாரம் பாய்ந்த இளைஞர் அரைகுறை உயிருடன் தப்பித்தார்.




உடனடியாக இளைஞரை மீட்ட அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின்பேரில் அவர் தற்போது தேறியுள்ளார். கரண்டுக்கும் ஈரத்துக்குமே என்றுமே ஆகாது என்பதால் குளியல் அறையில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவார்கள். அதே எச்சரிக்கை அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டுமென்பதை மீண்டுமொருமுறை நினைவுபடுத்தி இருக்கிறது இந்த தேவாலய சம்பவம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண