மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அம்மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், கர்நாடகத்தின் சித்ரதுர்காவில் 21.02.2025 (வெள்ளிக்கிழமை) இரவு ஓட்டுநர் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Marihal பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதில் ஏறிய இளைஞரும் இளம்பெண்ணும் மராத்தியில் ஓட்டுநர் மற்றும் கன்டெக்டரிடம் மாராத்தி மொழியில் பேசி டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு அவர் எனக்கு மராத்தி தெரியாது; கன்னம் மொழி மட்டுமே தெரியும். அதில் பேசுமாறு கேட்டுள்ளார். அவர்கள் மராத்தி மொழியில் மட்டுமே பேசியுள்ளனர். அந்தப் பெண் அவர்களை மராத்தியில் பேசுமாறும், மாரத்தி மொழி கற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, 10 பேர் சேர்ந்து பேருந்து ஓட்டுநரையும் நடத்துரையும் தாக்கியுள்ளனர் என PTI செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர், நடத்துநர் தாக்கப்பட்டச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருக்கு எதிராக 14 வயது சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். அதில் அவர், நடத்துநர் தனக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார். போக்சோ வழக்கு தொடர்பாக இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கர்நாடக மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரிதாகி பெலகவி பகுதியில் மஹாராஷ்டிரா ஒட்டுநரும் தாக்கப்பட்டு அவர்மீது கருப்பு நிறம் பூசப்பட்டதாக சொல்லப்பட்டுகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என மஹாரஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மஹாராஷ்டிரா செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் கர்நாடகாவுக்கு சொந்தமான பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றன.