உத்தர பிரதேசத்தில் உள்ள பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கும்பமேளாவில், இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியதாக தகவல் தெரிவிக்கின்றன.
கும்பமேளா தீ விபத்து:
இந்நிலையில், அவ்வப்போது தீ விபத்துகள் அப்பகுதியில் நிகழ்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மகா கும்ப மேளா நடக்கும் இடத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர் தீ விபத்துகளானது, நடைபெற்று வருகின்றது. இன்று அலோபி பாக் நுழைவாயிலின் நடுரோட்டில் பைக் ஓடும் பைக்கில் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, உடனடியாக காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு வந்து, சுற்றி தடுப்புகளை அமைத்தனர். மேலும், வாகனங்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் உடனடியாக நிறுத்தப்பட்டனர். தீவிபத்தில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தீ விபத்தைத் தொடர்ந்து வெடிவிபத்து ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு அனைத்து சந்திப்புகளும் முடக்கப்பட்டன.
பைக் எரிந்து சாம்பல்:
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 5 நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பைக் எரிந்து சாம்பலானது.
பைக் ஓட்டுநர் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அதிக வெப்பம் காரணமாக தீ பரவியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் , ஒரே இடத்தில் கூடுவதால், ஒரு சிறிய விபத்துகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால், ஒவ்வொரு விபத்துகளும், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
எச்சரிக்கையில் காவல்துறை:
முன்னதாக, மஹா கும்ப மேளா நடக்கும் பகுதியில் உள்ள செக்டார் 19ல் உள்ள ஆசிரமத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் ஷர்மா கூறுகையில், முன்னதாக பிப்ரவரி 13 அன்று, மகா கும்பத்தின் 6வது பிரிவில் உள்ள பிந்து மாதவ் மார்க்கில் உள்ள நாக்வாசுகிக்கு அருகில் உள்ள முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கூடாரங்கள் எரிந்து நாசமானது, எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நாக்வாசுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிவு 6ல் உள்ள போலீஸ் லைன் முகாமில் இருந்து நண்பகல் வேளையில் புகை எழுவதாகக் கூறினார்.
"நான்கு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் சில நிமிடங்களில் அவர்கள் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. இருப்பினும், தீயில் இரண்டு கூடாரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது" என்று ஷர்மா கூறினார். இந்நிலையில், அசாம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கையுடன் உள்ளனர்.