குடிபோதையில் மாணவிகளை தன்னுடன் நடனமாட வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள மத்தியாடோ கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்  இந்த சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் இருந்த தலைமை ஆசிரியர் இந்த செயலை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.


தலைமை ஆசிரியர் ராஜேஷ் முந்த்ரா குடிபோதையில் இருந்ததாக மாணவிகளின் குடும்பத்தினர் புகார் கூறியதாகவும், கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமிகளை உள்ளே இருந்து பூட்டிவிட்டு அவருடன் நடனமாட வற்புறுத்தியதாக மாவட்டக் கல்வி அதிகாரி எஸ்.கே.மிஸ்ரா கூறினார். அந்த நடனத்தின் வீடியோவை தலைமை ஆசிரியர் படமாக்கியதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.




மேலும் அந்த அதிகாரி கூறுகையில், “மாணவிகள் வீட்டிற்குச் சென்று சம்பவம் குறித்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் எஸ் கிருஷ்ண சைதன்யா உத்தரவிட்டிருந்தார். தொகுதிக் கல்வி அதிகாரியால் விசாரணை அறிக்கை சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தார்” என்று கூறினார். பள்ளியின் தலைமையாசிரியரே மாணவிகளிடம் இதுபோல் நடந்துக்கொண்ட சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





 





 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண