மத்திய பிரதேசத்தின் டிண்டோரி அருகே ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டைக் கடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Continues below advertisement

ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்!

விளையாட்டு வினையாகும் என பலர் கூறக்கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் கோர சம்பவம ஒன்று அரங்கேறியுள்ளது.மத்திய பிரதேசத்தின் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா கிராமத்தில் வசித்துவரும் ராஜேந்திர பராட்டியாவிடம், ரசகுல்லா எனக் கூறி நாட்டு வெடிகுண்டை ராம்பகத் என்பவர் கொடுத்துள்ளார். ராஜேந்திரா பராட்டியா கொடுக்கப்பட்டதை ரசகுல்லா என நினைத்து வாயில் வைத்துக் கடித்ததும், அது வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரா பராட்டியாவை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

படாரியா மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் காட்டுப்பன்றிகள் உட்பட வனவிலங்குகளை வேட்டையாட வெடி பொருட்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் வெடி மருந்து உருண்டையை கொடுத்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Continues below advertisement

எதிர்பாரா விபத்தா? திட்டமிட்ட கொலையா?

இரவு நேரத்தில் ரசகுல்லா என தெரிவித்து வெடிகுண்டு கொடுக்கப்பட்டது இயல்பாக கேலி செய்யும் வகையில் நிகழ்ந்ததா அல்லது கொலை செய்யும் நோக்குடன் திட்டமிட்டு வழங்கப்பட்டதா என விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டோரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.