மத்திய பிரேதசத்தில் உள்ள நர்மதா ஆற்றின் மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 13  பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை மீட்ட தீயணைப்பு மற்றும் போலீசார், பேருந்தில் பயணித்த மற்ற பயணிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




மகாராஷ்ட்ரா அரசுக்கு சொந்தமான பேருந்து 30 முதல் 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மகாராஷ்ட்ராவின் நாக்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா – மும்பை தேசிய நெடுஞ்சாலையில்  தார் மற்றும் கார்கோன் எல்லை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.






ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கே இருந்த பாலத்தின் மீது மோதியது. பாலத்தின் மீது மோதியதில் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி உயரத்திற்கு கீழே கீழே ஓடிக்கொண்டிருந்த நர்மதா ஆற்றில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்து சுக்குநூறாக நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.




இதைக்கண்ட அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வந்தனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.






அவர்கள் உயிரிழந்த 13 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்கும் பணியும், காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நர்மதா ஆற்றில் ஓடும் பேருந்து கவிழ்ந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண