மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருவிழாவில் பழங்குடியின இளம் பெண்களிடம் வெட்டவெளியில் இளைஞர்கள் கும்பலாக அத்துமீறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்ட பழங்குடியினர் கொண்டாடும் திருவிழாதான் பகோரியா என்று அழைக்கப்படுகுறது. பில்ஸ் எனப்படும் பழங்குடி இனத்தவர்கள் இணைந்து நடத்தும் இந்த விழாவின் பாரம்பரியம் கிட்டத்தட்ட சுயம்வரம் போன்றது. இந்தியில் 'பக்' என்றால் ஓடுவது என்று பொருள்.
இந்த விழாவின்போது, மாபெரும் சுயம்வரம் நடக்கும், எந்த பெண்ணோ, ஆணோ அவர்களுக்கு பிடித்த ஒருவரை அழைத்த்துக்கொண்டு ஓடலாம். இதில் ஆண் தனது மனதுக்கு பிடித்த பெண்ணின் முகத்தில் சிவப்பு வண்ணச் சாயம் பூசுவார். அந்த பெண்ணுக்கும் ஆணை பிடித்திருந்தால் அவரும், அந்த ஆண் முகத்தில் வண்ணச் சாயம் பூசிக் கொள்ளலாம். பின்னர் வண்ணச் சாயம் பூசிக் கொண்ட ஜோடிகள் ஒன்றாக ஓடுவார்கள், அப்படி ஓடினாள் அவர்களுக்கு பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பது பில்ஸ் இன மக்கள் வழக்கம். அதன்மூலம் காதலிக்கும் ஜோடிகள் இதனை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்வர்.
இந்த பாரம்பரிய விழாவில் இப்போதெல்லாம் வெறும் ஊர்வல விழாவாக மட்டுமே நடந்து வருவதால், இந்த ஊர்வலத்தில் பில்ஸ் இனமக்கள் மட்டுமின்றி பலரும் கலந்து கொள்கிறார்கள். இது ஒரு ஊருக்கான திருவிழாவாக மாறியிருக்கிறது. அதிலும் ஊடுருவிய கொடூரர்கள், ஒரு பில்ஸ் இனப் பெண்ணை கூட்டமாக சேர்ந்து நாடு ரோட்டில் அனைவர் முன்னும் பாலியல் சீண்டல் செய்யும் விடியோ வெளியாகி காண்போரை அதிர வைக்கிறது. ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மார்ச் மாதம் மத்திய பிரதேசத்தில் பகோரியா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பில், பிலாலா, படேலியா பழங்குடியின சமுதாயத்தினர் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். பத்வானி, தார், அலிராஜ்பூர், கார்கோன் மற்றும் ஜாபுவா ஆகிய மாவட்டங்களில் இந்த பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பகேரியா திருவிழாவில் மக்களவை உறுப்பினர் சட்டார் சிங் தர்பார், சட்டமன்ற உறுப்பினர் பஞ்சிலால் மேதா, முன்னாள் எம்.எல்.ஏ, காலுசிங் தாகுர் தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புகழ்பெற்ற இந்த திருவிழாவை காண வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் திருவிழாவில் பங்கேற்ற பழங்குடியின இளம்பெண்களிடம் காவித் துண்டு அணிந்த இளைஞர்கள் கும்பலாக அத்துமீறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் 2 பெண்களை இளைஞர்களை பிடித்து அத்துமீறும் காட்சியும் அதை மற்ற இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. பெண்ணொருவர் வண்டியின் ஓரமாக நிற்கிறார், அவரை கூட்டத்தில் இருந்து ஒரு ஆண், இழுத்து, பிடித்து, பாலியல் ரீதியாக தாக்குகிறார். தாக்குதலை தாங்க முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் அந்த பெண் சோர்ந்து நிற்கிறார். ஒரு ஆண் விட்டதும் பின்னாலேயே இன்னொருவன் வந்து பாலியல் ரீதியாக தாக்குகிறான்.
அவனோடு சேர்ந்து ஒரு ஆண்கள் கூட்டமே அந்த பெண்ணை இழுத்து ஒரே நேரத்தில் நெறிக்கிறார்கள். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டிரைபல் ஆர்மி, இது வெட்கக்கேடான சம்பவம் என்றும், மத்தியப் பிரதேச அரசு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அலிராஜ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வீடியோவில், பெண்களிடம் அத்துமீறியவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து டிஜிபியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். டிரைபல் ஆர்மி ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவை ரீட்வீட் செய்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "மத்திய பிரதேசத்தில் சங்கிகள் ஆட்சியில் பெண்கள் நடத்தப்படும் நிலை இது.. முழக்கம் மட்டும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல இன்னொரு வீடியோவும் வைரலாகி வருகிறது, அந்த விடியோவில் பில்ஸ் இன இளைஞர்கள் பெண்களிடம் அத்துமீறிய நபரை அடித்து வெளுக்கிறாராகள்.