Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலுக்கான4 ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து உடனுக்குடன் காணலாம்.
மக்களவை தேர்தலின் 4வது கட்ட தேர்தலானது இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடந்து முடிந்தது. அதில், மாலை 6 மணி வரை 75 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், மாலை 5 மணி நிலவரப்படி 61.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்காளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முதியவர்கள், பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல் இணைந்து நடந்து வரும் சூழலில், அங்கு சில பகுதிகளில் வன்முறைகளும், கலவரங்களும் நடைபெறுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திராவில் உள்ள அனந்தபுரம் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே நடைபெற்ற மோதலைத் தடுக்க வந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது குடும்பத்தினருடன் இன்று வாக்குச் செலுத்தினார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவகுமாரும், வாக்காளரும் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி வரை 24.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஆந்திராவிலும் மக்களவைத் தேர்தலும், சட்டசபைத் தேர்தலும் இணைந்து நடந்து வரும் சூழலில் சித்தூரில் வாக்கு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
நாடு முழுவதும் நடைபெறும் 4ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் செலுத்தி வருகின்றனர்.
ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் மங்களகிரி தொகுதியில் இன்று வாக்களித்தார்.
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஹைதரபாத்தில் நேரில் ஓட்டுப்போட்டார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் இன்று வாக்கு செலுத்தினார்.
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்று 4ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 17.7 கோடி பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
96 தொகுதிகளில் போட்டியிட நான்காயிரத்து 264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக, தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 1488 வேட்புமனுப் படிவங்களும், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளுக்கு 1103 வேட்புமனுக்களும் கிடைக்கப் பெற்றன. இறுதியில் சில வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதால், தற்போது ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 வது கட்டத்திற்கு ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இதனிடையே மக்களவை தேர்தல் குறித்து சுவாரசியமான விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -