Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடந்த 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு!
Lok Sabha Election 2024 Phase 3 Voting LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று 93 தொகுதிகளில் நடைபெறுகிறது.
LIVE
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று 93 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 2 கட்டங்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவாம், குஜராத், டையூ & டாமன், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் 1,300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். இன்றைய வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக நடந்த 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு!
நாடு முழுவதும் நடைபெற்ற 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது.
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை 3 ஆம் கட்ட தேர்தல் - 1 மணி வரை 40% வாக்குப்பதிவு !
மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 39.92% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு - விறுவிறு வாக்குப்பதிவு
"India is progressing forward, and will continue to advance further", says Gautam Adani after casting his vote
— ANI Digital (@ani_digital) May 7, 2024
Read @ANI Story | https://t.co/hpPbbht3rK#GautamAdani #LokSabhaElection2024 #Gujarat pic.twitter.com/bADv7NlY6t
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு - காலை 11 மணி வரை நிலவரம் என்ன?
மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி வரை 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு - ராமர் கோயில் வழிபட்ட சத்தீஸ்கர் முதல்வர்
வாக்களிப்பதற்கு முன்பாக ராய்ப்பூரில் உள்ள ராமர் கோயிலில் வழிபட்ட சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில், லோக்சபா தேர்தல் 2024 க்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமமான பாகியாவுக்கு வாக்களிக்க உள்ளேன். ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர்” என தெரிவித்தார்.