Breaking news: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் வருகின்ற டிசம்., 22 ம் தேதி (நாளை மறுநாள்) உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைத செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி டிச.22ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளை போன 15 கிலோ நகையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
நெல்லை டவுண் பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் ஞானவள்ளி, உடற்கல்வி ஆசிரியர் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சியிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை பள்ளி கட்டட விபத்து தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் ஆய்வுகள் முடிந்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆட்சியர் எடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மற்றும் கேரள மதுவிலக்கு காவல்துறையினர் இணைந்து படந்தாலுமூடு எல்லை பகுதியில் நடத்திய சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ஆவணங்களின்றி கட்டுக்கட்டாக எடுத்துவரப்பட்ட ரூ.70 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வழக்கில் அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவர் விக்னேஷை இன்று காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்த விவகாரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ’சாட்டை’ துரைமுருகன் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூர் விரைந்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் சண்முகம் என்பவரது வீட்டிலும்,கோளாரம் பகுதியில் உள்ள கோழி பண்ணையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. இவர் நீரேற்று பாசன குத்தகைதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிபாளையத்தில் காவிரி செல்லும் சாலையில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எழில் அரசி தலைமையில் 5பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணியின் உறவினர்கள், உதவியாளர்களின் வீடுகளிலும், சேலம் அருகேயுள்ள மணிகண்டன் என்பவரது வீட்டிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
Background
ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற உணவுகளால் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து அவதூறு பரவியதால் எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி பிராட்டியூர் அருகில் காவல்துறையினர் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -