உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவில் கார் ஒன்று சாலையில் நிற்கும் விவசாயிகள் ஏற்றிவிட்டு நிற்காமல் செல்கிறது. இரண்டு கார்கள் அதேபோல் செல்கின்றனர். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 






முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில்  உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு இரண்டாவது நாளாக  தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அறையை, பிரியங்கா காந்தி துடைப்பத்தால் பெருக்கும் காட்சி வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.






மேலும், விவசாயிகளின் உயிரிழப்புக்கு தொடர்பானவர்கள் மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை எனவும்  பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பேசியுள்ளார்.










 “காவலில் வைக்கப்பட்ட என் சகோதரி  பயப்படவில்லை. அவர், ஒரு உண்மையான காங்கிரஸ்காரர், விடமாட்டார். சத்தியாக்கிரகம் நிற்காது” எனப் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.






இந்த வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.