கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து செம்பகமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது,  என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளிவந்தது. இதை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினார்.


தீப்பற்றி எரிந்த பேருந்து:

சில நிமிடங்களில் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்னதாக காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்தது.  இந்திராநகர் பகுதியில் உள்ள பிரபல பைக் ஷோரூம் அருகே காலி இடத்தில் தனியார் தொழிற்சாலை பேருந்துகளை நிறுத்துவது வழக்கம்.  இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் உள்ளே இருந்து திடீரென தீ பற்றி எரிய துவங்கியது.


இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பைக் ஷோரூம் ஊழியர்கள் அங்கிருந்த தீயணைப்பான் மற்றும் தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால்,  உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.


மேலும் படிக்க, 


Super Star Rajini: சூப்பர் ஸ்டார் பட்டம், விஜய் முதல் அஜித் வரை.. எதுக்கு சண்டை, ரஜினி அன்றும் இன்றும் சொன்ன பதில்..!


அனுமதி இல்லாமல் ஸ்பா... பாலியல் தொழில்.. விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் அதிரடி கைது