கேரளாவில் பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை வழங்கி மாவேலிக்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 




 கடந்த 2021,டிசம்பர் 19-ம் தேதியன்று பா.ஜ.க. OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் வீட்டில் நுழைந்த 15 SDPI (Social Democratic Party of India) - PFI (Popular Front of India)  உறுப்பினர்கள் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனார். ரஞ்சித் சீனிவாசன் மனைவி, குழந்தைகள் முன் அவர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 15- பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கு ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (Additional Sessions Court Mavelikara) விசாரணைக்கு வந்தது.அதன்படி, ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேரு நேரடியாக தொடர்பு இருப்பது நிரூப்பிக்கப்பட்டள்ளது; 3 பேர் கொலைக்கு உதவியாக இருந்ததும் உண்மை. இதன் அடிப்படையில், நைசாம், அஹ்மல், அனூப், முகம்மது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சஃப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாஹீர் உசைன், ஷாஜி பூவத்துங்கள், சம்னாஸ் அஸ்ரஃப் ஆகிய 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.


கேரளாவை உலுக்கிய கொலை சம்பவம்

ஆலப்புழாவைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் பா.ஜ.க.-வில் ஒ.பி.சி. அணி தலைவராக இருந்தவர்.ரஞ்சித் சீனிவாசன் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது கேரளாவையே உலுக்கியது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரில் 12 பேர் நேரடியாக கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் மூன்று பேர் அவர்களுக்கு உதவியவர்கள் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  இந்த வழக்கில் மரண தண்டவை வித்திக்கப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.




மேலும் வாசிக்க..


நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?


Real Estate Budget: வீடு வாங்க போறீங்களா? இடைக்கால பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!