கேதார்நாத்: கேதார்நாத் தாமின் கருவறை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. கருவறையின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் 550 தங்க அடுக்குகளுடன் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருவதாக கோயில் கமிட்டி உறுப்பினர்  தெரிவித்தார். இந்த தங்க அடுக்குகள் கருவறைக்குள் பொருத்திய பின் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.  






கேதர்நாத் கோயில்  இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.




  


 


ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில், கேதார்நாத் கோயிலின் கருவறையை தங்க அலங்காரம் செய்யும் பணி நேற்று காலை நிறைவடைந்தது. இப்பணி மூன்று நாட்களாக நடைபெற்றது என தெரிவித்தார். ஐஐடி ரூர்க்கி, மத்திய கட்டுமான ஆய்வகம் ரூர்க்கி மற்றும் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றின் ஆறு பேர் கொண்ட குழு கேதார்நாத் தாமுக்குச் சென்று கோயிலின் கருவறையை ஆய்வு செய்தது. ஆய்வுக்கு பின் நிபுணர்களின் அறிக்கை வழங்கினர். அதனை தொடர்ந்து கேதார்நாத் கோயிலின் கருவறையில் தங்கம் பூசும் பணி தொடங்கியது. கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில், இந்த தங்க தகடுகள் கேதார்நாத்தில் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் 18 குதிரை மற்றும் மூன்று நாட்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டது. இரண்டு ASI அதிகாரிகளின் மேற்பார்வையில் 19 கைவினை கலைஞர்கள் தங்க அடுக்குகளை பதிக்கும் வேலையைச் செய்ததாக அவர் கூறினார்.